திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு ! அதிரடி கவர்ச்சி திட்டங்கள் இடம்பெறுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று மாலை வெளியிட உள்ளதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை, அந்த தேர்தலின் கதாநாயகன் என்று கருணாநிதியால் வர்ணிக்கப்பட்டது. அதேபோல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரமும் இந்த தேர்தலில் கதாநாயகன் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் என்று கூறியிருந்தார்.

karunanidhi will be release his party manifesto on Sunday

இலவச கலர் டிவி உள்ளிட்ட பல கவர்ச்சி அறிவிப்புகளோடு வெளியான அந்த தேர்தல் அறிக்கை பெரும்பாலனவர்களை கவர்ந்தது. அதுவும் அந்த தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க ஒரு காரணமாகியது.

தற்போதைய சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால், வாக்குகளை பெற திமுக தனது தேர்தல் அறிக்கையை பெரிதாக நம்பியுள்ளது.

இரு வாரங்கள் முன்பே வெளியிடப்படும் என்று கூறப்பட்டு வந்த தேர்தல் அறிக்கையில் மேலும் பல கவர்ச்சி திட்டங்கள் சேர்க்கப்படும் வேலை நடந்து வந்தது. இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் கருணாநிதியை சந்தித்து 100 பக்கங்களும் மேல் கொண்ட தேர்தல் அறிக்கையை சமர்பித்தனர்.

இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தலைவர் கருணாநிதி நாளை வெளியிட உள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இதனை அவர் வெளியிட உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி தேர்தல் வாக்குறுதிகளும் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+