திமுகவை தொடர்ந்து வழி நடத்துவார் கருணாநிதி - ஸ்டாலின்
கருணாநிதியின் உடல்நலம் தேறிவருகிறது. திமுகவை அவர் தொடர்ந்து வழி நடத்துவார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வரும் கருணாநிதி விழாவில் பங்கேற்றால் நோய் தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியதாலேயே அழைத்து வரவில்லை என்று ஸ்டாலின் கூறினார். உடல் நலம் தேறி வரும் கருணாநிதி, திமுகவை தொடர்ந்து வழி நடத்துவார் என்றும் கூறினார்.
ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. வைர விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவரையும் செயல் தலைவர் என்ற முறையில் வரவேற்றார் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து பேசிய அவர், கருணாநிதியின் சாதனைகளை எடுத்துக்கூறினார். தமிழகத்தில் 19 ஆண்டுகாலம் முதல்வராக இருந்து சாதனை படைத்தவர் கருணாநிதி.
உலக வரலாற்றில் சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியே பார்க்காத தலைவர் கருணாநிதி. இந்த விழாவின் நாயகர் கருணாநிதி இங்கே இருந்திருக்க வேண்டும். அவரை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தோம். ஆனால் பொது மேடையில் பங்கேற்றால் நோய் தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
உடல்நலம் தேறிவரும் நிலையில் விழாவுக்கு வந்தால் தொற்று ஏற்படும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். விழாவுக்கு வராவிட்டாலும் கருணாநிதி நம்மை வழிநடத்த வேண்டும் என்பதால் அவரை அழைத்துவரவில்லை.
திமுகவை தொடர்ந்து வழி நடத்துவார் கருணாநிதி. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே மிகப்பெரிய தலைவர் கருணாநிதி. இந்த விழாவிற்கு தேசிய அளவில் பல தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர் என்று கூறினார்.
-
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications