கருணாநிதி மீண்டும் நன்றாக பேசுவார் - அழகிரி நம்பிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும் அவர் விரைவில் பேசுவார் என்றும் மு.க. அழகிரி கூறியுள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொள்ளுப் பேரன் திருமணத்தில் மு.க. அழகிரி கலந்து கொண்டார். அப்போது அவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். மதுரைக்கு வந்து தன்னுடன் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார்.

Karunanidhi will talk soon says MK Alagiri

இன்று காலை அவர் விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார் அழகிரி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

அவர் சீக்கிரம் பேசுவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி ஆஸ்திரேலியா சென்றுள்ள டாக்டர்கள் திரும்பி வந்த பிறகு தான் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK chief M Karunanidhi will return to public stage and his voice will echo again, said former central minister MK Alagiri.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற