கூவத்தூரில் நான் இல்லாம எப்படி இந்த அரசு உருவானது- கருணாஸ் கேள்வி
Recommended Video

சென்னை: கூவத்தூரில் இந்த கருணாஸ் இல்லாமல் எப்படி இந்த அரசு உருவானது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது தி நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.

போகிற போக்கில் முதல்வரையும் வம்புக்கு இழுத்துவிட்டார். அவர் பேசுகையில் முதல்வர் வர்ராறே மரியாதை கொடுக்கலாம் என்று நின்றால், அவர் 100 போலீஸோடு வருகிறார். கேட்டால் நீங்கள் முதல்வரை மறிக்க போறீங்க, அடிக்க போறீங்க என்கிறார்.
முதல்வரே நான் அடித்து விடுவேன் என பயப்படுகிறார் போலும். இந்த கருணாஸ் இல்லாமல் எப்படி அரசாங்கம் ஏற்பட்டது. கூவத்தூர் ரிசார்ட்டை காட்டினது நான்தான். இதை நீங்கள் மறுப்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பேச்சின் போது தி.நகர் போலீஸ் டிசி அரவிந்தை ஒருமையில் பேசினார். பின்னர் தற்போது ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications