கருணாஸ் சசிகலாவிடம் பங்கு வாங்கியிருப்பார்... போட்டுத்தாக்கிய அமைச்சர் ஜெயக்குமார்!
ஆட்சியைத் தக்கவைத்ததில் தனக்கும் பங்குள்ளதாகக் கருணாஸ் தெரிவித்துள்ளதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆட்சியைத் தக்கவைத்ததில் தனக்கும் பங்குள்ளதாகக் கருணாஸ் தெரிவித்துள்ளதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். கருணாஸ் சசிகலா தரப்பிடம் பங்கு வாங்கியிருப்பார் என அவர் விமர்சித்துள்ளார்.
நவராத்திரியை முன்னிட்டுச் சென்னை குறளகத்தில் கதர் கிராமத் தொழில்வாரியத்தின் கொலுப் பொம்மை கண்காட்சியை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆட்சியை தக்க வைத்ததில் தனக்கும் பங்குள்ளதாக கருணாஸ் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அமைச்சர் பதிலடி
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் கருணாஸ் சசிகலா தரப்பினரிடம் பங்கு வாங்கியிருப்பார் என தெரிவித்தார்.

கருணாஸ் இல்லாமலா உருவானது?
கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கருணாஸ், கூவத்தூரில் இந்த கருணாஸ் இல்லாமயா இந்த அரசாங்கம் உருவானது?

முதல்வரே பயப்படுகிறார்
கூவத்தூர் இடத்தை காட்டினது இந்த கருணாஸ்தான். அதை மறுக்க முடியுமா? என கேள்வி எழுப்பியிருந்தார் மேலும் நான் அடிப்பேன் என முதல்வரே பயப்படுகிறார் என்றார் கருணாஸ்.

அமைச்சர் கருத்து
கருணாஸின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications