அரசியலில் இருந்து விலக முடிவு? நடிகர் கருணாஸ் சூசகம்!
அரசியல் தமக்கு செட் ஆகாது என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

வேடசந்தூர்: அரசியல் தமக்கு செட் ஆகாது என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
வேடசந்தூரை அடுத்த மாரப்பாடியில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்றது. இதில் திருவாடானை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் அதிமுக இரண்டாக பிரிந்து செயல்படுவது வேதனை அளிக்கிறது என்றார். மேலும் ஜெயலலிதா இருந்தபோது அதிமுக எப்படி இருந்தது தற்போது எப்படி உள்ளது என்றும் தான் பார்த்து வருவதாகவும் அவர் கூறினார்.

அரசியல் செட்டாகாது
தன்னைபோன்ற எதார்த்தவாதிகளுக்கு அரசியல் ஒத்துவராது என்றும் கருணாஸ் கூறினார். தமக்கு அரசியல் செட்டாகாது என 2016ஆம் ஆண்டிலேயே முடிவு செய்துவிட்டதாகவும் கருணாஸ் கூறினார்.

மாற்றி மாற்றி பேசுவது
அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் மாற்றி மாற்றி பேசுவது தமக்கு சரியாக வராது என்றும் அவர் கூறினார். கனவில் கூட பொய் சொல்லக்கூடாது என்பதுதான் தனது தத்துவம் என்றும் அப்படிதான் தன்னை தனது பெற்றோர் வளர்த்ததாகவும் அவர் கூறினார்.

அரசியலுக்கு முழுக்கு?
இது நமக்கு செட்டாகாது என்ற அவர் மீண்டும் முழுநேர சினிமாவில் இறங்கயிருப்பதாகவும் சூசகமாக கூறினார். கருணாஸின் இந்த பேச்சு அவர் விரைவில் அரசியலுக்கு முழுக்கு போடவுள்ளார் என்பதையே காட்டுகிறது.

சசி, தினகரனின் ஆதரவாளர்
கருணாஸ் அதிமுக சார்பில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனக்கு எம்எல்ஏ சீட் கிடைத்தற்கு காரணம் என சசிகலாதான் என பல மேடைகளில புகழ்ந்த அவர், சசிகலா மற்றும் தினகரனின் ஆதரவாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்! -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
Election Exclusive: எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக உணர்கிறார்! மாஜிக்களின் உள்குத்து பாலிடிக்ஸால் அதிருப்தி! களத்தில் மகன்? -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
ஆள் பார்த்து போடுங்க.. இப்பவே உள்ளடி வேலை கையை மீறி போகுதே.. ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா? -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
Anbumani: இந்த 108 நாட்களில்! சவுமியா உடலில் ஆவி புகுந்துவிட்டது! அன்புமணி கலகல!












Click it and Unblock the Notifications