Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ தியாகராஜன் ஆங்கில பேச்சு... கருணாஸ் விமர்சனம்- கூச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் ஆளுங்கட்சியினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் பேசும் போது திமுக உறுப்பினர்களைப் பற்றி விமர்சனம் செய்தால் அதற்கு ஒட்டு மொத்த திமுக எம்.எல்.ஏக்களும் கூச்சலிட்டு அமளியில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது.

திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசியதை அதிமுக ஆதரவு உறுப்பினர் கருணாஸ் எம்.எல்.ஏ விமர்சித்ததால் சபையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.

என்னுடைய ஆங்கில பேச்சு முதல்வருக்கு நன்கு புரியும் என்பதால் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன் என்று தியாகராஜன் எம்.எல்.ஏ சட்டசபையில் விளக்கம் அளித்தார்.

கருணாஸ் பேச்சு

கருணாஸ் பேச்சு

சட்டசபையில் திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ, தமிழ்வளர்த்த மதுரை தொகுதியைச் சேர்ந்தவர் தனக்கு தமிழ் தெரியாது ஆங்கிலத்தில் பேசுகிறேன் என கூறி ஆங்கிலத்திலேயே பேசினார்.
அவர் ஆங்கிலத்தில் பேசியதால் அமைச்சர்களின் குறுக்கீடு இல்லாமல் இருந்தது, இனி நாமும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என சில திமுகவினர் பேசிக் கொண்டது என் காதுகளுக்கு எட்டியது என்றார்.

திமுகவினர் கூச்சல்

திமுகவினர் கூச்சல்

அப்போது கருணாஸ் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. சபாநாயகர் அமைதி படுத்த முயன்றும் திமுக உறுப்பினர்கள் அமைதியாகாததால், கருணாஸ் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை கருத்து தெரிவிக்க சபாநாயகர் அனுமதித்தார்.

 ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் பேச்சு

உறுப்பினர் கருணாஸ் கற்பனையாக எதை எதையோ சபையில் பேசுகிறார். அவர் கற்பனையாக பேசியதை பேரவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். என்றார். அதற்கு சபாநாயகர் தனபால், கருணாஸ் பேசியதற்கு நீங்கள் கருத்து தெரிவித்துள்ளீர்கள். இருவர் பேசியதும் பேரவை குறிப்பில் இடம் பெறும் என்றார்.

சபாநாயகர் தனபால்

சபாநாயகர் தனபால்

திமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து மீண்டும் கூச்சல் போட்டனர். அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் தனபால்,' நீங்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்ததும், சபை குறிப்பில் இடம் பெறும். பிரச்சனையை இத்துடன் விடுங்கள் என்றார்.

துரைமுருகன்

துரைமுருகன்

ஒரு சட்டசபை உறுப்பினர் ஆங்கிலத்தில் பேச தங்களிடம் அனுமதி கேட்டு பேசும் போது, அதை இன்னொரு உறுப்பினர் விமர்சிக்கக் கூடாது. எனவே, கருணாஸ் பேசியதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். சபாநாயகர் தனபால்: கருணாஸ் பேசியது ஒன்றும் சபையில் பேசக்கூடாத வார்த்தை இல்லை. நீக்க வேண்டிய வார்த்தை என்றால் நீக்கி விடுவேன்.

அவை மரபல்ல

அவை மரபல்ல

சபையில் ஒரு உறுப்பினர் இன்னொரு உறுப்பினரின் பெயரை சொல்லி குற்றம்சாட்டுவது மரபல்ல. உறுப்பினர் தனக்கு சரளமாக தமிழ் பேச வராது என்பதை சொல்லித்தான் தனது ஆங்கில பேச்சை தொடர்ந்தார். அதை கொச்சைப்படுத்தி கருணாஸ் பேசியுள்ளார் என்று ஸ்டாலின் கூறினார்.

கொச்சைபடுத்தலாமா?

கொச்சைபடுத்தலாமா?

காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் தெலுங்கில் சபையில் பேசியபோது, முதல்வர் ஜெயலலிதா தெலுங்கிலேயே பதில் அளித்தார். முதல்வரின் பேச்சை கொச்சைப் படுத்தி பேசலாமா? பேரவை விதி 14ல் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ பேசலாம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின்

சட்டசபையில் விவாதம்

சட்டசபையில் விவாதம்

புது உறுப்பினர் என்பதால் இன்னொரு உறுப்பினரை காயப்படுத்தி பேசக்கூடாது என்று துரைமுருகன் கூறவே, அதற்கு சபாநாயகர் தனபால், தியாகராஜன் விளக்கம் சொல்லலாம் என்றார்.

 தியாகராஜன் விளக்கம்

தியாகராஜன் விளக்கம்

எங்கள் குடும்பம் நீதிக்கட்சியில் தொடங்கி பாரம்பரியம் மிக்கது. எனது தாத்தா தான் மதுரை தமிழ் சங்கத்தையும், திருவள்ளுவர் கழகத்தையும் தொடங்கி நிதி கொடுத்து, பல வகையிலும் தமிழை வளர்த்துவந்தார். அதை நாங்கள் இன்னும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். நான் பேசும் போதே நான் அரசியல் பேச இங்கு வரவில்லை, பட்ஜெட்மீது தான் பேச வந்துள்ளேன் என்றார்.

தமிழில் பேச சிரமம்

தமிழில் பேச சிரமம்

நான் படித்தது முழுக்க ஆங்கிலத்தில், அதனால் பட்ஜெட்டில் உள்ள சில ஆங்கில வார்த்தைகளை தமிழில் சொல்வது என்பது எனக்கு சிரமமானது என்பதால், என்னுடைய ஆங்கில பேச்சு முதல்வருக்கு நன்கு புரியும் என்பதால் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன் என்று கூறி விட்டுதான் பேசினேன்.

தமிழில் விளக்குவேன்

தமிழில் விளக்குவேன்

என்னால் தமிழில் விளக்க முடிந்தவற்றை பேச்சின் போது அவ்வப்போது தமிழிலும் விளக்கி பேசினேன். கருணாசுக்கு புரியும்படி பேசுவதென்றால், எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை, நிதி நிலை அறிக்கையை அவரது அரசியல் அறிவுக்கு எட்டும் அளவுக்கு என்னால் தமிழில் பேசமுடியும் என்று கூறினார் தியாகராஜன். இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+