கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேற.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார்.. கருணாஸ் அதிரடி
கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற எம்எல்ஏ பதவியை இழக்கவும் தயாராக இருப்பதாக கருணாஸ் கூறினார்.
கும்பகோணம்: கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேற எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.
கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று அக்கிராமத்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கதிராமங்கலத்திற்கு எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் சென்றனர். அங்கு ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடி வரும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் போன்ற பிரச்சனைகள் எழுந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்று கூறினார். மேலும், கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்றும் அதற்காக நாங்கள் மூவரும் எங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறோம் என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications