புரட்டாசி பவுர்ணமி! திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்! கையில்ஆயுதத்துடன் தெரிந்த உருவம்! பரபரப்பு!
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பவுர்ணமியையொட்டி 50 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். அப்போது ஒரு முகம் வெளியே தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வந்தால் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பதால் இங்கு மக்கள் அவ்வப்போது சென்று வருகிறார்கள்.

அதே நேரம் திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் பவுர்ணமி, அமாவாசை, அஷ்டமி போன்ற நாட்களில் கடல் உள்வாங்கும் என்பார்கள்.
அது போல் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி நேற்றைய தினம் திருச்செந்தூர் கடற்கரையில் நீராடி விட்டு முருகனை தரிசித்து சென்றனர். அப்போது திருச்செந்தூர் கடற்கரையில் திடீரென 50 அடிக்கு கடல் நீர் உள்வாங்கியது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்தனர். உடனே அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

இதை கண்ட போலீஸாரும் பக்தர்கள் யாரும் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர். இந்த நிலையில் அந்த உள்வாங்கிய இடத்தில் ஒரு உருவம் தெரிந்தது. அது என்ன என போய் பார்த்த போது கருப்பசாமி சிலை. உடனே பக்தர்கள் அதை எடுத்து வந்து பக்தி பரவசமடைந்தனர். இந்த நிலையில் அந்த சிலையை என்ன செய்ய போகிறார்கள், கோயிலேயே பிரதிஷ்டை செய்ய போகிறார்களா, இல்லை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க போகிறார்களா என தெரியவில்லை.
மேலும் இது கடத்தல் சிலையா இல்லை எங்கிருந்தாவது அடித்து வந்ததா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்றைய தினம் காற்றழுத்தம் தெற்கு ஆந்திராவில் கரையை கடந்த நிலையில் தமிழகம், ஆந்திராவில் உள்ள கடற்கரைகள் ஆக்ரோஷமாக இருந்தன. கன்னியாகுமரி, நாகை , மாமல்லபுரம் உள்ளிட்ட கடற்கரைகள் கொந்தளித்தன. அலைகளின் சீற்றமும் அதிகமாகவே இருந்தன. அந்த வகையில் திருச்செந்தூர் கடற்கரையில் நீர் உள்வாங்கியது. அதில் பாசிகள் தெரிந்தன.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications