சூர்யாவின் "கருப்பு" கோர்ட் சீன் எடுத்தது இந்த யுனிவர்சிட்டிலயா? பிரம்மாண்டத்தின் ரகசியம் இதுதான்!
சென்னை: கருப்பு படம் சூர்யா ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஒரு ட்ரீட்டாகவே இருக்கிறது. இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள். இதற்கிடையே படத்தில் கிட்டத்தட்ட ஒரு கேரக்டர் அளவுக்கு இருக்கும் நீதிமன்றக் காட்சிகள் எங்குப் படமாக்கப்பட்டது என்பது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
"கங்குவா" படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யாவுக்கு ஒரு 'கம் பேக்' தேவைப்பட்டது. அதை இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தனது 'கருப்பு' (Karuppu) திரைப்படம் மூலம் கச்சிதமாகச் செய்து முடித்துள்ளார். கடந்த மே 15 அன்று ரிலீஸான இந்த ஃபேண்டஸி ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெய்னர், தற்போது தியேட்டர்களில் ரசிகர்களின் மரண மாஸ் கொண்டாட்டத்துடன் 'பிளாக்பஸ்டர்' ஹிட் அடித்துள்ளது.

எங்கே
சூர்யா ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும் இந்தக் கருப்பு படத்தின் உயிர்நாடியே அந்த நீதிமன்றக் காட்சிகள் தான். சூர்யா கலக்கும் அந்த நீதிமன்றக் காட்சிகள் எங்குப் படமாக்கப்பட்டது என்பது தொடர்பாகக் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. இது ஏதோ கோர்ட் செட் என்று நினைத்தால், அதுதான் இல்லை... கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தான் அந்தக் காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டுள்ளது.
எல்லாம் அப்படியே இருக்கு
என்ன தான் செட் போட்டாலும் நீதிமன்றத்தின் பிரம்மாண்டத்தைக் கொண்டு வர முடியாது என்பதற்காகவே இங்கு எடுத்துள்ளனர். படத்தில் வரும் அந்த 'செவன் வெல்ஸ்' நீதிமன்றக் காட்சிகள் இந்த பல்கலைக்கழகத்தின் பாரம்பரியக் கட்டிடத்தின் முன்னால் தான் எடுக்கப்பட்டுள்ளன. படத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் 'வேட்டை கருப்பசாமி' சிலை, மக்கள் தங்களின் நீதிக்காகப் பிரார்த்தனை செய்யும் காட்சி மற்றும் சூர்யாவின் மாஸ் ஃபைட் சீன்கள் என அனைத்தும் இங்கு தான் எடுக்கப்பட்டுள்ளன. அந்த மரத்தில் இன்னமும் படப்பிடிப்பிற்காகக் கட்டப்பட்ட கயிறுகள் கூட அப்படியே இருக்கின்றன.
படத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தும் அந்த அதிரடி காட்சியும், கட்டிடத்தின் உச்சியில் சூர்யா மாஸாக அமரும் அந்த 'காட் மோட்' சீன் என அனைத்துமே இங்கு எடுக்கப்பட்டவை தான். அதாவது நீதிமன்ற வளாகமாகக் காட்டி அவுட்டோரில் எடுக்கப்பட்ட அனைத்துக் காட்சிகளுமே இந்த பல்கலைக்கழகத்தில் தான் எடுக்கப்பட்டவை. கோர்ட் ரூம் சீன்கள் உட்பட இதர சீன்கள் அனைத்தும் தனியாக செட் போடப்பட்டு, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
ரிலீஸ் குழப்பம்
'கருப்பு' திரைப்படம் மே 14ம் தேதி ரிலீஸாக வேண்டியிருந்தது. ஆனால், சில நிதி சிக்கல் காரணமாக படம் சொன்னபடி ரிலீஸ் ஆகவில்லை. முதலில் ஸ்பெஷல் ஷோ மட்டும் ரத்து செய்யப்பட்ட நிலையில், பிறகு முதல் நாள் காட்சிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. சூர்யாவை திரையில் காண ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது.. பின்னர், சிக்கல்கள் அனைத்தும் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு, ஒரு நாள் தாமதமாக மே 15 வெள்ளிக்கிழமை அன்று படம் ரிலீஸ் ஆனது.
சூப்பர் வரவேற்பு
கடைசி நிமிடத் தடைகளைக் கடந்து படம் ரிலீஸ் ஆனவுடன், சூர்யா ரசிகர்கள் திரையரங்குகளைத் திருவிழாக் கோலமாக மாற்றினர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா - த்ரிஷா கூட்டணி இணைந்துள்ளதால் தியேட்டர்களில் அனல் பறக்கிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே சூர்யாவுக்கு நல்ல ஒரு தியேட்டர் ஹிட் படம் அமையாத குறையைக் கருப்பு படம் போக்கிவிட்டது. முதல் வீக் எண்ட்டில் மட்டும் உலகெங்கும் சுமார் ₹120+ கோடியை கருப்பு படம் வசூலித்துள்ளது.
ஆர்ஜே பாலாஜியின் வித்தியாசமான கமர்ஷியல் மேஜிக் மற்றும் சாய் அபியங்கரின் பின்னணி இசை ஆகியவை படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்து. 2026ன் மிகப் பெரிய தமிழ் ஓப்பனிங் கொண்ட படமாக இதைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்தப் படத்திற்கு அட்டகாசமான வரவேற்பு கிடைத்துள்ளது.
-
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
Bharathiraja: பாரதிராஜா உடலை பார்த்து சிவகுமார் பேசிய வார்த்தை.. கண்கலங்க வைத்த காட்சி -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications