எம்.ஜி.ஆரின் 98வது பிறந்த நாள்.. பைக் ரேஸ் விட்டுக் கொண்டாடிய கரூர் அதிமுக!
கரூர்: அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம் ஜி ஆரின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மோட்டர் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளபாளையத்தில் எம் ஜி ஆரின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு மோட்டர் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது
பள்ளபாளையத்தில் இருந்து ராஜபுரம் பிரிவு சென்று மீண்டும் பள்ளபாளையம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்தை வீரர்கள் கடந்தனர். கரூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

பந்தயத்தை கிருஷணராயபுரம் தொகுதி அதிமுக சட்டசபை உறுப்பினர் காமராஜ் கொடி அசைத்து தொடக்கிவைத்தார். போட்டி தொடங்கியதும் மோட்டார் சைக்கிள்கள் சீறி பாய்ந்து சென்றன. போட்டியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்தோடு சாலையோரம் நின்று பார்வையிட்டனர். சின்னதாராபுரம் காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக வீரர்களுக்கான தலைக்கவசம் போட்டி நடத்தும் குழுவினர் மூலம் கொடுக்கப்பட்டது. இந்த போட்டியில் கரூர் வாங்கல் பகுதியை சேர்ந்த சங்கர் முதலிடமும், நெரூர் பிரகாஷ் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை ஜெயபாலும் பிடித்தனர்.
வெற்றி வெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கோப்பையும், ரொக்கப் பரிசுகளை எம்.எல்.ஏ. காமராஜ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த பேக் ரேஸ் நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications