Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் களத்தில் நிற்கும் அதிமுக வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்ட அதிமுக வேட்பாளர்களாக விஜயபாஸ்கரும், செந்தில் பாலாஜியும், கீதா மணிவண்ணனும், ஆர்.சந்திரசேகரனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சரும், தற்போதைய கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜிக்கு இம்முறை அரவக்குறிச்சித் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்கரூர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயபாஸ்கர் (வயது 51). 1989 ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருந்து வருகிறார். கொங்கு வெள்ளாளக் கவுண்டர் இனத்தை சேர்ந்த இவர், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை தாந்தோணி ஒன்றிய செயலாளராகவும், 2015 ஆண்டு முதல் 2016 வரை மாவட்ட செயலாளராகவும் இருந்தவர். தாந்தோணி ஒன்றியக் குழு உறுப்பினராக தொடர்ந்து மூன்று முறை இவர் தேர்வு செய்யப்பட்டார்.

செந்தில்பாலாஜி

செந்தில் பாலாஜிஅரவக்குறிச்சி சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளரான செந்தில்பாலாஜி (வயது 41) தற்போதைய கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராவார். இவர், 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். முன்னதாக, கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர், மாவட்ட மாணவர் அணி செயலாளர், ஜெ பேரவை செயலாளர், மாணவர் அணி இணைச் செயலாளர், கிளைகழகத் தலைவர் ஆகிய பதவிகளையும் இவர் வகித்துள்ளார். 1996, 2001 ஆம் ஆண்டுகளில் இருமுறை கரூர் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

ம. கீதா மணிவண்ணன்

ம. கீதா மணிவண்ணன்கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ம. கீதா மணிவண்ணன் ( வயது 42 ) கடந்த 1996ம் ஆண்டு முதல் கட்சி உறுப்பினரான இவர், உள்ளாட்சி பதவிகளையும் வகித்தார். தற்போது கரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக பதவி வகித்து வந்தார். எம்எஸ்சி, பிஎட்., படித்துள்ள இவர், ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார்.

ஆர்.சந்திரசேகரன்

ஆர்.சந்திரசேகரன்குளித்தலை தொகுதி அதிமுக வேட்பாளரான ஆர்.சந்திரசேகரன் ( வயது 58 ) செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர். 1980 முதல் நெய்தலூர் அதிமுக கிளை கழகத்தில் கட்சி பணியைத் தொடங்கிய இவர், 2009 முதல் குளித்தலை சட்டமன்ற தொகுதி இணை செயலாளர். இருமுறை தோகைமலை ஒன்றிய குழுத் தலைவராகவும் இவர் இருந்தார். பியூசி படித்துள்ள இவரது தொழில் விவசாயம் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+