தொடர்மழை... கரூரில் அமராவதி ஆற்றில் வெள்ளம்... கலெக்டர் நேரில் ஆய்வு
கரூர்: கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கரூரில் அமராவதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மழை தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழக அணைகள், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் நிரம்பி வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் உள்ள அமராவதி அணை முழுகொள்ளவை எட்டியதை அடுத்து அணையில் இருந்து சுமார் 37ஆயிரம் கனஅடிநீர் திறந்து விடப்பட்டது.
உடுமலைபேட்டையில் துவங்கும் அமராவதி ஆறு கடைமடை பகுதியான கரூர் வரை பாய்கிறது. அமராவதி ஆற்றில் அதிகமான நீா் வெளியேற்றப்படுவதால். ஆற்று கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டது.

வெள்ளம்...
இந்நிலையில் அமராவதி ஆற்றின் துணை ஆறான நங்காஞ்சி ஆறு, குடகனாறு, சண்முகாநதி இவற்றிலிருந்து வெளியான உபரிநீர்களும் அமராவதி ஆற்றில் கலந்துவிடுவதால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேரில் ஆய்வு...
இதனை அடுத்து வெள்ளத்தை கரூா் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஷி நிர்மல் குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கரூா் பசுபதிபாளையத்தில் வழியாக செல்லும் அமராவதி ஆற்றை பார்வையிட்டனா்.

குறைவான மழை...
கரூா் மாவட்டத்தின் ஆண்டு மழையளவு 652.2.மி.மீ. ஆகும். அக்டோபா் மாதம் முடிய கிடைக்க வேண்டிய சராசரி மழையான 493.7 மி.மீ.க்கு நடப்பு மாதம் வரை 298.2 மி.மீ. மழை மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. அதாவது சராசரி மழை அளவைகாட்டிலும் 40 சதவீதம் குறைவாகவே பெறப்பட்டுள்ளது.

மூன்றில் ஒரு பங்கு...
தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை பொருத்தளவில் சாராசரி குறைந்தளவே மழை பெய்துள்ளன. ஆனால் கடந்த சில பத்துநாட்களாக வடகிழக்கு பருவமழை சாரசரியில் மூன்றில் ஒரு பங்கு மழையானது மாவட்டத்தில் 101.2 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.

மொத்த மழையளவு...
அதன்படி மாவட்டத்தில் அரவக்குறிச்சி பகுதியில் - 97 மி.மீட்டரும், க்.பரமத்தி - 27.80, குளித்தலை- 1.50, மாயனூர் -6, கரூா் -6, அணைப்பாளையம் - 52, தோகைமலை -17,பஞ்சப்பட்டி - 11.20, பாலவிடுதி - 24.40, கடவூா் -10.20, கிருஷ்ணராயபுரம் -7, மைலம்பட்டி -5 என இம்மாவட்டத்தில் மொத்தம் 265.10 மி.மீ மழை பெய்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications