தேவையில்லை பிளாஸ்டிக்... பாட்டில்களால் சுவர் அமைத்து விளக்கிய பள்ளி மாணவர்கள்!
கரூர்: பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று விழிப்புணர்வு ஊர்வலங்கள், பேரணி, கண்காட்சி, துண்டுபிரசுரங்கள் என்று மத்திய, மாநில அரசுகள் ஏராளமாக செலவு செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், தேவையில்லை என ஒதுக்கும் பொருட்களைகூட தேவையானதாக மாற்றிக்கொள்ள முடியும் என்று கரூர் அரசு பள்ளி மாணவாகள் சற்று வித்தியாசமாக சிந்தித்து உள்ளனர்.

விளைவு, குப்பைக்கு எடுத்துச் செல்லப்படும் தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு காம்பவுண்ட் சுவர் அமைத்து அசத்தியுள்ளனர் அரசு பள்ளி மாணவ மாணவிகள். கரூர் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம் ஆச்சிமங்கலம் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள். இந்த பள்ளியில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 84மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 6ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு காம்பவுண்ட சுவர் இல்லாமல் இருந்தது. தங்கள் பள்ளியில் எவ்வாறு புதிய படைப்புகளை உருவாக்கலாம், தங்கள் பள்ளிக்கு குறைந்த செலவில் எவ்வாறு காம்பவுண்ட் சுவர் கட்டலாம், என்று சிந்தித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு இணையதளம் மூலம் ஒரு ஒளிமயமான வழி கிடைத்தது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொலிவியா, நைஜிரியா போன்ற நாடுகளில் செங்கல் இல்லாமல் வேண்டாம் என்று வீசி எறியும் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் வீடு கட்டுவதும் மதில் சுவர் எழுப்புவதும:, குடிநீர் தொட்டிகள் அமைப்பது உள்ளிட்ட வகைகளை பார்த்தனர். இந்த முறையை பின்பற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்க முடிவு செய்தனர்.

முதல்கட்டமாக காலிபாட்டில்கள் சேகரிக்க தொடங்கினர். நான்கே நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிபிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தனர். பின்னர் இந்த காலி பாட்;டில்களில் காற்று புகாதவாறு மணல் நிரப்பினர். தொடர்ந்து செங்கலுக்கு பதிலாக பாட்டில்களை வரிசையாக அடுக்கி செம்மண் கலவை மூலம் பூசினர்.
இவ்வாறு தொடர்ந்து நான்கு நாட்களில் நான்கு அடி உயரமும், 25 அடி நீளமுள்ள காம்பவுண்ட் சுவர் எழுப்பி சாதனை படைத்துள்ளனர். சுமார்; 25ஆயிரம் ரூபாய் செலவாகும் இந்த சுவரை 5 ஆயிரத்து 500 ரூபாய் செலவிலே கட்டி முடித்துள்ளனர் இந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள். செங்கலுக்கு இணையான இந்த காம்பவுண்ட் சுவர் பல ஆண்டுகள் உறுதியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications