பிரசவத்தின்போது பெண் திடீர் மரணம்... இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பின்னர் மரணமடைந்த பரிதாபம்!
கரூர்: ஊட்டியைத் தொடர்ந்து கரூரில் பிரசவத்தின்போது இளம் பெண் மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டியில் கடந்த 24 ஆம் தேதி முதல் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம் தாய்மார்கள் ஐந்து பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கால், அப்பெண்கள் பலியாகி இருக்கலாம் என உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறுகையில், ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுதான் இளம்தாய்மார்களின் மரணத்துக்கு காரணம். மருத்துவர்களின் சிகிச்சை காரணமே அல்ல என்று விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் அதே போல ரத்தப் போக்கு காரணமாக இன்னொரு இளம் தாய், கரூர் அரசு மருத்துவமனையில் இன்று மரணத்தைச் சந்தித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வெள்ளையக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (27) இவரது மணைவி சித்ரா (24). இவர்களுக்கு ஏற்கனவே, நிஷாந்த் (1) என்கிற மகன் உள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்காக சித்ரா கரூர் அரசு மருத்துவமணையில் கடந்த 17ந்தேதி சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இரட்டை குழந்தை வயிற்றில் இருப்பதை டாக்டர்கள் ஸ்கேன் மூலம் கண்டறிந்தனர். இன்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சித்ராவிற்கு முதலில் ஒரு ஆண்குழந்தை நார்மலாக பிறந்துள்ளது. அடுத்த குழந்தை பிரசவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அதன்படி சித்ராவிற்கு அறுவை சிகிச்சை செய்து இன்னொரு ஆண் குழந்தை எடுக்கப்பட்டது. பின்னர் அவரை வார்டுக்கு மாற்றியுள்ளனர். ஆனால் சற்று நேரத்தில் சித்ராவிற்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. இதுகுறித்து டாக்டர் மற்றும் நர்ஸ்களிடம் சித்ராவின் உறவினர்கள் தெரிவித்தபோது அவர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்ராவின் உடல்நிலை மோசமடைந்து சற்று நேரத்தில் சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் டாக்டர்களைக் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications