அய்யோ மண்டை காயுதே.. கமல் ட்வீட்டுக்கு கஸ்தூரி காட்டிய ரியாக்ஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் போட்டுள்ள திடீர் டிவீட்டுகளால் பலர் குழம்பிப் போய் உள்ளனர். அதில் உள்ள அர்த்தம் என்ன என்று புரியாததால் மண்டை காயுதே என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

சமூக வலைத் தளங்களில் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் கண்டபடி பேசிய கஸ்தூரி, திடீரென ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எதிர்ப்புகள் கிளம்பிய போது நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு நடிகை கஸ்தூரி ஆதரவு தெரிவித்திருந்தார்.

kasthuri reaction about Kamal hassan's twitter comment

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள் 100 நாட்கள் வீட்டுக் காவலில்தான் உள்ளனர். அவர்களை ஏன் கைது செய்ய வேண்டும்.?  முதலில் கலாசார பயங்கரவாதிகளிடம் இருந்துதான் தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும். இந்து மதம் உங்கள் தனிப்பட்ட சொத்து அல்ல. வேலி போட்டு பாதுகாக்க என கமலுக்கு ஆதரவாக கருத்து மழை பொழிந்திருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன் டிவிட்டரில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். கவிதை வடிவில் உள்ளது அந்த டிவிட்கள். ஆனால் சரிவர அர்த்தம் புரிந்து கொள்வதுதான் சிரமமாக உள்ளது. கமல்ஹாசனே இதை விளக்கினால்தான் உண்டு. ஆனால் அவர் நாளைதான் விளக்கப் போகிறார்.

கமலின் டிவிட் குறித்து நெட்டிசன்கள் பலகருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கஸ்தூரி, அய்யோ மண்டை காயுதே.. இது ஒரு புதிராக உள்ளதே என டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress kasthuri reaction about Kamal hassan's twitter comment.
Please Wait while comments are loading...