இன்று முதல் மூத்த பத்திரிகையாளர் கதிர் எழுதும் புதிய அரசியல் தொடர்... 'தாழப் பறக்கும் காக்கைகள்'!

Subscribe to Oneindia Tamil

கதிர் எனும் கதிர்வேல்..

இன்றைக்கு ஊடகத்துறையில் முன்னிலையில் உள்ள பலருக்கும் ஆசிரியர் என்றால் இவர்தான். கதிர்வேல் எனும் முழுப் பெயர் கூட பலருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே... பொதுவாக அனைவருக்கும் அவர் 'கதிர் சார்'!

இவர், ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை முடித்து தற்செயலாக தமிழ் ஊடகத்தில் பிரவேசித்த வாசகன். என்றுமே தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பாதவர்.

முன்னணி நாளிதழ்கள், சஞ்சிகைகளில் வெற்றிகரமான ஆசிரியராக வலம் வந்தவர்.

Kathir sir's new political series.. Thaazha Parakkum Kaakkaigal

இதழியலில் சாதிக்க, இலக்கணத்தை காட்டிலும் எளிதில் பொருள் உணர்த்தும் நடை முக்கியம் என்று மொழி ஆர்வலர்களுடன் மல்லுக்கட்டுபவர்.

தவறுகளைப் பெரிதுபடுத்தாமல், இன்னொரு வாய்ப்பு கொடுப்போம் என்று புதியவர்களைத் தட்டிக் கொடுப்பவர். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சூத்திரதாரி!

தமிழ் செய்தியுலகம் மக்கள் சார்பு நிலைக்கு மாறும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பவர்.

இன்றைய அரசியல் போக்குகளை புதிய கோணத்தில் மக்கள் முன் வைக்கிறார், தாழப் பறக்கும் காக்கைகள் தொடர் மூலம்.

கருத்துப் பரிமாற [email protected]

-முதன்மை ஆசிரியர், ஒன்இந்தியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+