நீதிதேவதை வேடமிட்ட சிறுமியிடம் பொதுமக்கள் மனு: ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் நூதனப் போராட்டம்
கதிராமங்கலத்தில், கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக் கொண்ட சிறுமியிடம் பொதுமக்கள் மனு கொடுத்து நூதனப் போராட்டம் நடத்தினர்.
கும்பகோணம்: கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக் கொண்ட சிறுமியிடம் கதிராமங்கலம் கிராம மக்கள் மனு கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதில் கைதான 10 பேரை விடுவிக்கக் கோரியும் கடந்த 1ம் தேதி முதல் கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும், கடந்த மாதம் 12ம் தேதி முதல் கதிராமங்கலம் எல்லை அய்யனார் கோயில் திடலில் முகாமிட்டு அங்கேயே தங்கி சமைத்து உண்டு காத்திருப்பு போராட்டத்தை ஊர் பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் நீதிதேவதை போன்று வேடமிடப்பட்ட சிறுமி ஒருவர் நிறுத்தப்பட்டிருந்தார். அவரிடம் பொதுமக்கள் அனைவரும் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து 28வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. என்றாலும் தமிழக அரசு இதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அமைதி காக்கிறது. இது கதிராமங்கலத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications