ஜெயலலிதா மரண செய்தி கேட்டு உடைந்து அழுத சசிகலா - "கத்துக்குட்டி" இரா. சரவணன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணச் செய்தி கேட்டு மருத்துவமனையில் சசிகலா உடைந்து அழுதார் என்று கத்துக்குட்டி திரைப்பட இயக்குநர் சரவணன் கூறியுள்ளார்.
சென்னை: அப்பல்லோவில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இதய முடக்கம் ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி திமுக, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வெள்ளை அறிக்கை கேட்டு வருகின்றனர். ஆனால் அப்பல்லோ நிர்வாகமே ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எப்படி நடந்து கொண்டார் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நல்ல நிலையில் உடல்நிலையில் தேறி வந்தார் என்றும், அவரால் பேச முடியவில்லை என்றும் திரைப்பட இயக்குநர் சரவணன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் 2-ம் மாடியில் இருந்தார் இயக்குநரும் பத்திரிகையாளருமான சரவணன். அவர் சன் நியூஸ் சேனலுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சிகிச்சை பெற்ற வந்த ஜெயலலிதா, தனக்கு தேவையானவற்றை அருகில் இருந்த சிலேட்டில் எழுதி காட்டுவார். கையெழுத்து போடும் அளவிற்கு உடல் நிலை தேறி வந்தார் என்றும் சரவணன் கூறியுள்ளார். கடைசி நாளில் அவரது மரணம் பற்றி மருத்துவமனை நிர்வாகம் கூறிய உடன் ஜெயலலிதா இருந்த அறைக்குள் சென்று திரும்பிய சசிகலா, கிராமத்தில் இருப்பவர்கள் துக்கம் தாளாமல் அழுவது போல சசிகலா உடைந்து அழுதார் என்றும், இருமுறை தேம்பி தேம்பி அழுதார் என்றும் கூறியுள்ளார் சரவணன்.
ஜெயலலிதாவை 75 நாட்களும் யாருமே பார்க்க வில்லை. சசிகலா மட்டுமே பார்த்தார். நோய் தொற்று அதிகரித்து விடக்கூடாது என்பதால்தான் யாரையும் பார்க்க விடவில்லை. அதோடு மருத்துவமனையில் இருக்கும் சூழ்நிலையில் தன்னை பார்க்க ஜெயலலிதா யாரையும் அனுமதிக்க வில்லை மருத்துவர்கள், நர்ஸ்கள் மட்டுமே பார்த்தார்கள் என்றும் சரவணன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த புள்ளிகள், அவரது மரணத்திற்கு முன்பாக அப்பல்லோவில் நடந்தது என்ன? முதல்வராக ஒபிஎஸ்தான் வரவேண்டும் என்று ஜெயலலிதா சொன்னதாக சசிகலா கூறியது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார் சரவணன்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications