கட்ஜுவுக்கு இருக்கும் 'கட்ஸ்' கூட நமக்கு இல்லாமப் போச்சே!
சென்னை: முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு இருக்கும் கட்ஸ் கூட நம்மவர்களுக்கு இல்லை என்பது நாளுக்கு நாள் ஆச்சரியத்தை அதிகரித்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா்க அப்படிப் பேசி வருகிறார் கட்ஜு. அதேபோல ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களை போட்டுத் தாக்கியும் வருகிறார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக தொடர்ந்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துக்கள், யோசனைகளைச் சொல்லி வருகிறார். ஆனால் இதில் ஒன்றைக் கூட தமிழக அரசு கவனிப்பதாக தெரியவில்லை.
தமிழக அரசே அவசரச் சட்டத்தைக் கொண்டு வரலாம், மத்திய அரசைக் கெஞ்ச வேண்டியதில்லை என்றும் அவர் ஐடியா கொடுத்தார். ஆனால் தமிழக அரசு அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

தமிழர்களுக்காக
தமிழர்கள் பிரச்சினையில் உள்ளனர். அவர்களுக்கு எனது யோசனைகள் தேவைப்படும் என்று கூறி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் கட்ஜு தனது பேஸ்புக் பக்கத்தில்.

பீட்டாவுக்கு பொளேர் அடி
இந்த நிலையில் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல ஆர்வலர்களை சற்று முன்பு ஒரு பிடி பிடித்துளார் கட்ஜு. சொல் ஒன்றும் பேச்சு ஒன்றுமாக அவர்கள் இருப்பதாக சாடியுள்ளார் கட்ஜு.

சொகுசு வாழ்க்கை
இதுகுறித்து கட்ஜு போட்டுள்ள பதிவில், விலங்குகள் நல ஆர்வலர்கள் என்று கூறிக் கொள்ளும் பலரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள். ஆடம்பரமாக வாழ்ந்து வருபவர்கள்.

பங்களாவாசிகள்
பெரிய பெரிய பங்களாக்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்ந்து வருபவர்கள். பெரிய பெரிய கார்களை வைத்துள்ளவர்கள். வங்கிகளில் பணத்தைக் கொட்டிக் குவித்து வைத்திருப்பவர்கள்.

சாதாரண மக்களைப் பற்றிக் கவலை இல்லை
இவர்களுக்கு சாதாரண மக்களைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. வறுமையைப் பற்றிக் கவலையில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துக் கவலை இல்லை. ஊட்டச் சத்துக் குறைப்பாட்டால் குழந்தைகள் தவிப்பது குறித்துக் கவலை இல்லை.

விலங்குகளுக்காக மட்டும் உருகுவார்கள்
இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாத இவர்கள் விலங்குகளுக்காக மட்டும் ரத்தக் கண்ணீர் வடிப்பார்கள் என்று அந்தப் பதிவில் சாடியுள்ளார் கட்ஜு.

ஒப்புக்கு வருத்தம்
தனது பதிவில் கடைசியாக உருதுக் கவிஞர் அக்பர் அல்லாபதியின் வரி ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார் கட்ஜு. அது.. மக்களோட கவலைகளை தீர்க்கிற மக்கள் தலைவருக்கு நாம ஆசைப்பட்டாலும், கிடைப்பது என்னவோ, ஆறுதல் சொல்லக் கூட தகுதியற்றவர்கள்தான்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications