ஊழலுக்கு எதிரானவர்கள் என் உறவினர்களே: கமல் அதிரடி
ஊழலுக்கு எதிரான அனைவரும் எனக்கு உறவினர்களே என்று கூறியுள்ளார் நடிகர் கமல்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கெஜ்ரிவால்-கமல் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு-வீடியோ
சென்னை: கெஜ்ரிவாலுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ஊழலுக்கு எதிரான அனைவரும் தனக்கு உறவினர்களே என்று கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நடிகர் கமலை இன்று அவரின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார். ஒரு மணிநேரம் இருவரும் பேசிய பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தன்னை சந்திக்க சென்னை வந்தது பெரும் பாக்கியம் என்று கூறினார்.
எனது தந்தை இருந்த போது அரசியலுடன் தொடர்பு இருந்தது. ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனது உறவினர்களே என்று கூறினார்.
கமலின் இந்த பேட்டியே அவரது அரசியல் வருகையை உணர்த்தி விட்டது என்றே கூறலாம்.












Click it and Unblock the Notifications