ஜெயலலிதாவின் வெற்றியை கணித்து ரூ.10 லட்சம் பெற்று ஐ.டி. வலையில் சிக்கிய ஜோதிடர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பரப்பனன்காடியைச் சேர்ந்தவர் ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர். முதல்வர் ஜெயலிலதாவின் ஆஸ்தான ஜோதிடர். கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் ஆவார் என்று அவர் கணித்துக் கூறினார். கிரிமினல் வழக்குள் நிலுவையில் இருந்ததால் ஜெயலலிதாவால் அப்போதைய தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்றாலும் அதிமுக அபார வெற்றி பெற்றது. இதையடுத்து ஜெயலலிதா முதல்வர் ஆனார்.
அவர் முதல்வர் ஆவார் என்று துல்லியமாக கணித்த பணிக்கருக்கு ரூ.10 லட்சம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 2002-2003ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்குதலில் பணிக்கர் தனது வருமானம் ரூ.2.67 லட்சம் என்றும், தனது தொழில் மூலம் செலவுகள் போக ரூ.1.89 லட்சம் தான் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அன்பளிப்பாக கிடைத்த ரூ.10 லட்சத்திற்கு வரி விலக்கு கோரியிருந்தார்.
ஆனால் அவர் அந்த அன்பளிப்பு பணத்திற்கும் வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பணிக்கர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை கடந்த மாதம் நிராகரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு அன்பளிபப்பாக கிடைத்த பணம் அவரது தொழில் மூலம் கிடைத்ததால் வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications