தமிழக முதல்வர் நலம் பெற தாந்தீரிக முறைப்படி பூஜை செய்ய வேண்டும்- கேரள ஜோதிடர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் நலம் பெற தாந்தீரிக முறைப்படி பூஜை செய்தால் வெகு விரைவில் குணமடைந்து, இப்போது உள்ளதை விட மிகப் பிரபலமான தலைவராக வலம் வருவார் என கேரளாவின் பிரபலமான ஜோதிடர்களின் ஒருவரான குருவாயூர் ஸ்ரீ சூரிய நம்பூதிரிகள் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

முதல்வர் ஜெயலலிதா சிம்மராசி, மகம் நட்சத்திரம், மிதுன லக்னம் என்பது அனைவருக்கும் தெரியும். கேது திசையில் பிறந்த ஜெயலலிதாவிற்கு தற்போது குரு திசை சனி புத்தி நடக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் தசாபுத்தி மாறும் போது விபத்து, உடல்நலக்குறைவு ஏற்படும். பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த சிரமங்களைத் தவிர்க்கலாம். கோடிகணக்காக தொண்டர்கள் செய்யும் பிரார்த்தனைகள் ஜெயலலிதாவைக் காக்கும் என்கின்றனர் தமிழகத்தில் உள்ள பிரபல ஜோதிடர்கள்.

கேரளா ஜோதிடர்

கேரளா ஜோதிடர்

கேரளாவின், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீ சூரிய மங்களம் தாந்திரீக வித்யா பீடம் மிக பிரசித்தி பெற்றதாகும். இங்கு தங்களது எதிர்காலத்தை கணிக்கவும், நிகழ்காலம் குறித்து அறிந்து கொள்ளவும், உலகம் முழுவதிலும் இருந்து பலர் வந்து ஜோதிடம் பார்ப்பது வழக்கம்.

ஜெயலலிதா உடல் நலம்

ஜெயலலிதா உடல் நலம்

ஸ்ரீ சூரிய மங்களம் தாந்திரீக வித்யா மடத்தின் பீடாதிபதி சூரிய நம்பூதிரி நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதிக்கு வருகை தந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சூரிய நம்பூதிரி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவுக்கு முக்கிய காரணங்களைத் தெரிவித்தார்.

தாந்தீரிக பூஜை

தாந்தீரிக பூஜை

முதல்வருடைய ஜாதகத்தில் 2017 அக்டோபர் 27 வரை நேரம் சரியில்லை என்றும், முதல்வர் நலம் பெற தாந்தீரிக முறைப்படி பூஜை செய்தால் வெகு விரைவில் குணமடைந்து, இப்போது உள்ளதை விட மிகப் பிரபலமான தலைவராக வலம் வருவார் சூரிய நம்பூதிரி உறுதிபட தெரிவித்தார்.

விரைவில் நலம் பெறுவார்

விரைவில் நலம் பெறுவார்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோதிடர் தஹிசி டோத் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதா உணவு மற்றும் மருந்து நச்சு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த 2014ல் இருந்து அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சனி புத்தி மற்றும் குரு தசா நடக்கிறது என்று தெரிவித்து இருந்தார். முதல்வர் உடல் நலம் பெற்று 2017ல் இருந்து நன்றாக பணியாற்றுவார் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் சூரிய நம்பூதிரி ஜோதிடரும் முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து நலமுடன் இருப்பார் என்று கணித்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+