ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி... மார்ஸுக்குப் பறக்கப் போகும் மாணவி பேட்டி
சென்னை: சாகசங்கள் புரிவதும், ரிஸ்க் எடுப்பதும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலேயே செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்புவதாக அக்கிரகத்துக்கு ஒரு வழிப் பயணமாக செல்ல இருக்கும் கோவை மாணவி தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த நெதர்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான ‘மார்ஸ் ஒன்' அமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, செவ்வாய்கிரகத்துக்கு பயணம் செய்ய தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணிகளை அந்நிறுவனம் தொடங்கியது. இதற்காக உலகம் முழுவதும் இருந்து சுமார் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடக்கம்.
இது ஒரு வழி பயணம் ஆகும். செவ்வாய் கிரகத்துக்கு பத்திரமாக போய் சேர்ந்தால் அங்கேயே தங்கி விட வேண்டியது தான். திரும்பி வர இயலாது.
இந்த வினோத பயணத்திற்காக உலகம் முழுவதும் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து 3 சுற்று சோதனைகள் மூலம், 50 ஆண்கள், 50 பெண்கள் கொண்ட 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவில் இருந்து 39 பேர், ஐரோப்பியர் 31, ஆசியாவில் இருந்து 16, ஆப்பிரிக்கா மற்றும் ஓசியானியாவில் இருந்து தலா 7 பேர் அடங்குவர்.
இந்த பட்டியலில் புளோரிடாவில் ஆய்வுக்கல்வி பயின்று வரும் தரண்ஜீத் சிங் (வயது 29), துபாயில் வசித்து வரும் ரித்திகா சிங் (29), கேரளாவை சேர்ந்த இளம்பெண் சாரதா பிரசாத் (19) ஆகிய 3 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சாரதா பிரசாத், கோவை வடவள்ளியில் பெற்றோருடன் தங்கி, எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார். பெற்றோருக்கு ஒரே வாரிசான இவர், பல்வேறு தடைகளைத் தாண்டி தான் இந்த செவ்வாய் கிரக பயண வாய்ப்பைப் பெற்றுள்ளாராம்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் சாரதா பிரசாத் கூறியதாவது:-

ஒரே இந்தியப் பெண்...
செவ்வாய்கிரகத்துக்கான பயண தேர்வுக்கு, 3-வது சுற்றில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இந்தியாவை சேர்ந்த ஒரே பெண் நான்தான் என்பதில் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். மற்ற 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.

வெற்றி பெறுவேன்...
நான் தேர்வு செய்யப்பட்டது, எனக்கு 13-ந் தேதியே தெரியும். இருப்பினும், வெளியே சொல்லக்கூடாது என்று கூறிவிட்டனர். 3-வது சுற்று தகுதி தேர்வில் உடல்திறன், மன திறன் முக்கிய தேர்வாக இருந்தது. மிகவும் சவாலான போட்டியாக விளங்கிய 3-வது சுற்றில் வெற்றி பெற்றுவிட்டேன். 4-வது சுற்றிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

பெற்றோரின் சம்மதம்...
செவ்வாய்கிரகத்துக்கு சென்றால், திரும்ப முடியாது என்பதால் ஆரம்பத்தில் எனது பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. பெற்றோரை சம்மதிக்க வைத்து இந்த போட்டிகளில் கலந்துகொண்டேன். இப்போது எனது பெற்றோர் முழு சம்மதம் தெரிவித்து விட்டனர்.

விண்வெளி அறிவியல் ஆர்வம்...
எனக்கு விண்வெளி அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் ஆர்வம் அதிகம். அத்துடன், ரிஸ்க் எடுப்பதிலும், சாகசங்கள் புரிவதிலும் ஆர்வம் உண்டு. செவ்வாய் கிரக பயணத்தில் இவை இரண்டும் இருப்பதால், செல்வாய் கிரகத்தில் குடியேற ஆர்வமாக இருக்கிறேன்.

வாய்ப்பு...
குடும்பத்தையும், நண்பர்களையும் பிரிந்து செல்வது கடினமான ஒன்றுதான். ஆனால், இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. இறுதி சுற்று தேர்வுக்காக இப்போதே நான் என்னை தயார்படுத்தி வருகிறேன்.

வரலாற்றில் இடம் பிடிப்பேன்...
செவ்வாய் கிரகத்துக்கு நிச்சயம் நான் பயணம் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியர்களுக்கு பெருமையாகவும், உலக வரலாற்றில் இடம் பெறுவதாகவும் இந்த பயணம் அமையும்.
இவ்வாறு சாரதா பிரசாத் கூறினார்.

இறுதி பட்டியல்...
3-வது சுற்றில் வெற்றி பெற்றதற்காக தாய் கீதா, மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தற்போது தேர்வு செய்யப்பட்டவர்களிடம் இன்னும் கடினமான சோதனைகள் நடத்தப்பட்டு, 24 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்வெளி பயிற்சி...
அந்த பட்டியலில் இடம்பிடிப்போருக்கு 7 ஆண்டுகள் விண்வெளி பயிற்சிகள் அளிக்கப்படும். பின்னர் 2024-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 4 பேர் வீதம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

எதிர்பார்ப்பு...
இறுதிபட்டியலில் இந்தியர்கள் இடம்பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு இந்தியாவில் உள்ளவர்களிடம் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமும் உள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications