தென் சென்னை திமுக வேட்பாளர் குஷ்பு? இவங்கதான் திமுக கூட்டணி வேட்பாளர்களாம்
சென்னை: லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளராக நடிகை குஷ்பு அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
திமுக 35 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் 2 தொகுதிகளிலும் இதர கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்கள் யாராக இருக்கக் கூடும் என்ற பட்டியலும் இப்போது பரபரத்துக் கொண்டிருக்கிறது. வழக்கம் போல வாரிசுகள் பலரும் திமுக வேட்பாளர்களாக களம் இறக்கப்பட இருக்கின்றனர்.

வடசென்னையில் சேகர்பாபு?
வடசென்னை தொகுதியில் திமுக அமைப்பு செயலர் டி.கே.எஸ். இளங்கோவன் அல்லது அதிமுகவில் இருந்து தாவிய சேகர்பாபு களமிறக்கப்படலாம்.

தென்சென்னையில் நடிகை குஷ்பு?
தென் சென்னை தொகுதியில் நடிகை குஷ்பு களம் இறக்கப்பட இருக்கிறாராம். குஷ்பு அல்லது வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதிக்குத்தான் தென் சென்னை வேட்பாளர் வாய்ப்பு இருக்கிறதாம். குஷ்பு களம் இறக்கப்படுகிறார் என்பதை கடந்த ஆண்டு ஜூலை மாதமே நாம் பதிவு செய்திருந்தோம்

மத்திய சென்னையில் தயாநிதி? மா.சு.?
மத்திய சென்னையில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் அல்லது முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வேட்பாளர்களாக இருக்கலாம்.

திருவண்ணாமலையில் எ.வ.வேலு மகன்?
திருவண்ணாமலையில் எ.வ.வேலு மகன் எ.வ.வே.கம்பன் நிறுத்தப்படலாம்.

நீலகிரியில் மீண்டும் ஆ.ராசா
நீலகிரி தொகுதியில் மீண்டும் ஆ. ராசாவையே திமுக நிறுத்துகிறதாம்.

திண்டுக்கலில் ஐ.பெரியசாமி மகன்?
திண்டுக்கல் தொகுதியில் ஐ. பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில்குமார் அல்லது முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் போட்டியிடக் கூடுமாம்.

தூத்துக்குடியில் பெரியசாமி மகன்?
இதேபோல் தூத்துக்குடியில் பெரியசாமி மகன் ஜெகனுக்கு வாய்ப்பு உண்டாம்.

மதுரையில் பொன். முத்து?
மதுரையில் அழகிரியின் பரம எதிரியான பொன். முத்துராமலிங்கத்துக்கு திமுக தலைமை வாய்ப்பு கொடுக்கலாம்.

சிதம்பரத்தில் மீண்டும் திருமா?
திமுக அணியில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளைப் பெறுகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அக்கட்சித் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடலாம். விழுப்புரத்தில் சிந்தனைச் செல்வன் அல்லது ரவிக்குமார் நிறுத்தப்படலாம்.

தென்காசியில் கிருஷ்ணசாமி மகள்?
தென்காசியில் நாம் ஏற்கெனவே பதிவு செய்தது போல புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகள் டாக்டர் சங்கீதா வேட்பாளராக நிறுத்தப்படலாம்.

ராமநாதபுரத்தில் ஹைதர் அலி?
திமுக அணியில் இடம்பிடித்துள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம் கிடைக்கிறது. அங்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி போட்டியிடுகிறாராம்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ











Click it and Unblock the Notifications