குஷ்புவுக்கு சரியாயிருச்சு: மீண்டும் 4 நாட்கள் பிரசாரம் செய்கிறார்
சென்னை: நடிகை குஷ்பு மீண்டும் நான்கு நாட்கள் பிரசாரம் செய்யப் போவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
கடந்த சில தினங்களாக அவர் பிரசாரம் செய்யவில்லை, உடல்நலக் கோளாறு காரணமாக அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் 4 நாட்கள் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம்
இன்று மாலை 3.30 மணிக்கு விழுப்புரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முத்தையனை ஆதரித்து விழுப்புரத்தில் குஷ்பு பிரசாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விக்கிரவாண்டி, திண்டிவனம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
காஞ்சிபுரம்
மாலை 6 மணிக்கு காஞ்சீபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அச்சரப்பாகத்தில் பிரசாரம் செய்கிறார். பின்னர் மதுராந்தகம், சிங்கப்பெருமாள் கோவில், சோத்துப்பாக்கம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
மத்திய சென்னை
நாளை (20-ந்தேதி) தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மத்திய சென்னை தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 21-ந்தேதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து தென்சென்னை தொகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார்.
திருவள்ளூரில் குஷ்பு
22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திருவள்ளூர் தொகுதியில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications