உன் வீட்டு பொம்பளங்களை சொன்னா பத்தி எரியுதா?- டுவிட்டரில் குஷ்பு 'குழாயடி' சண்டை
நடிகை குஷ்பு வெளிநாடு போயும், நிம்மதியாக ஊரை சுற்றிப் பார்க்காமல் டுவிட்டரில் தனக்கு எதிராக பதிவிட்டவர்களுடன் சண்டை போட்டு வருகிறார்.
சென்னை: உன் வீட்டு பொம்பளங்களைப் பத்தி பேசுனா பத்தி எரியுதா? நானும் ஒரு இல்லத்தரசி, ஒரு மனைவி, ஒரு தாய், ஒரு மகள், ஒரு சகோதரி புரியுதாடா? என்று டுவிட்டரில் தன்னைப் பற்றி தவறாக கமெண்ட் செய்த நபரிடம் என்று சண்டை போட்டுள்ளார் நடிகை குஷ்பு.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, ஒரு நடிகையாக, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இல்லத்தரசியாக ரொம்பவே பிசியானவர். டுவிட்டர், ஃபேஸ்புக்கில் அதீத ஆர்வத்துடன் பதிவிடுவார்.
டுவிட்டரில் குஷ்புவை சீண்டி பலர் பதிவிடுவார்கள், அவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பார் குஷ்பு. இது பலமுறை நடந்துள்ளது. மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே டுவிட்டரில் குஷ்புவின் கோபச்சண்டை தொடர்கிறது.
|
செலக்டிக் அம்னீசியா
மோடி கேதார்நாத் ஆலயத்தில் தரிசனம் செய்த படத்தைப் போட்டு விமர்சனம் செய்திருந்ததார் நடிகை குஷ்பு. செலக்டிவ் அம்னீசியா என்றும் கூறியிருந்தார்.
|
என்ன தகுதி இருக்கு?
மோடிய பற்றி பேசறதுக்குன்னு சில தகுதிகள் வேண்டும்! அது உனக்கு இருக்கான்னு முதல்ல சுய பரிசோதனை செய்து பார்த்துட்டு வா. என்று பதிலுக்கு பதிவிட்டார் ஒருவர்
|
யார் கூத்தாடி?
குஷ்புவை கூத்தாடி என்று ஒருவர் கூறவே, கோபம் கொண்டு கொந்தளித்த குஷ்பு, உன் வீட்டு பொம்பளங்களைப் பத்தி பேசுறயாடா? என்று பதிவிட்டார்.
|
மனிதனே இல்லை
குஷ்புவை முஸ்லீம் பெண் என்று போட்டு ஒருவர் கிண்டடித்திருந்தார். தலாக் பற்றி பேசுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு, நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன். மதம் பேசுபவர்கள் மனிதனே இல்லை என்றும் கூறியிருந்தார் குஷ்பு.
|
நானும் ஒரு இல்லத்தரசி
குஷ்புவின் பேச்சு அந்த நபருக்கு கோபத்தை வரவழைத்து விட்டதோ என்னவோ? ஆபாசமாக பேசுவதா என்று கேட்டார். அதற்கு குஷ்புவோ, உன் வீட்டு பொம்பளங்களைப் பத்தி பேசுனா பத்தி எரியுதா? நானும் ஒரு இல்லத்தரசி, ஒரு மனைவி, ஒரு தாய், ஒரு மகள், ஒரு சகோதரி புரியுதாடா? என்று பட்டென்று கூறி பொட்டில் அடித்தார் குஷ்பு. வெளிநாடு போயும் விடாமல் டுவிட்டரில் சண்டை போடுவது ஏன் குஷ்பு.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications