For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோல் செருப்பு இல்லாமல் நடமாடுங்களே.. பாஜக தலைவர்களுக்கு குஷ்பு குட்டு

மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ள பாஜகவின் தலைவர்கள் தோல் செருப்பு இல்லாமலும் தோல் பொருட்களை பயன்படுத்தாமலும் இருப்பார்களா? என கேள்வி கேட்கிறார் குஷ்பு.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ள பாஜகவின் தலைவர்கள் தோல் செருப்பு இல்லாமல் நடமாடுவார்களா? என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நடிகை குஷ்பு கூறியதாவது:

என் தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்பது என்னுடைய உரிமை. இதைத்தான் சாப்பிடனும், உடுத்த வேண்டும், படிக்க வேண்டும் என யாரும் கட்டுப்பாடு விதிக்க கூடாது.

மாட்டிறைச்சி ஏற்றுமதி

மாட்டிறைச்சி ஏற்றுமதி

உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. அதுவும் பாஜக ஆட்சியில்தான் இரு மடங்காக மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

தாவரங்கள்...

தாவரங்கள்...

தாவரங்களுக்கும் உயிர்கள் இருக்கிறதுதானே.. அதனால் காய்கறி, பழங்களை யாருமே சாப்பிடக் கூடாது எனவும் தடை விதிப்பார்களோ?

தோல்சார் பொருட்கள்

தோல்சார் பொருட்கள்

மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கும் பாஜகவினர் தோல் பொருட்கள் எதனையும் பயன்படுத்தாமல் இருப்பார்களா? பெல்ட்டுக்கு பதில் நாடா கயிறு கட்டிக் கொள்ளட்டும்.

தோல் ஏற்றுமதி

தோல் ஏற்றுமதி

இந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்துதான் 40% தோல் ஏற்றுமதி நடக்கிறது. இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய நட்டம் உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

English summary
Congress Spokesperson Actress khushbu has condemned the Centre's beef ban.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X