ஜெயலலிதாவை வாழ்த்திவிட்டு நாட்டை விட்டு கிளம்பும் குஷ்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தியுள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு. பள்ளி விடுமுறையில் இருக்கும் மகள்களுடன் குஷ்பு இன்று வெளிநாட்டிற்கு சுற்றுலா கிளம்புகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு. திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக ஊர், ஊராக பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போன்று வராவிட்டாலும் அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டுள்ளார் குஷ்பு.
|
அதிமுக
சிலருக்கு வெற்றி கிடைக்கும், சிலருக்கு தோல்வி...அது தான் வாழ்க்கைச் சக்கரம். அதிமுகவுக்கு வாழ்த்துக்கள், மமதாவுக்கும் வாழ்த்துக்கள் என்று ட்வீட்டியுள்ளார் குஷ்பு.

மகள்கள்
குஷ்பு தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்தார். இதனால் பள்ளி விடுமுறையில் இருக்கும் அவரின் 2 மகள்களால் தாயுடன் நேரம் செலவிட முடியவில்லை. அந்த குறையை தற்போது போக்கியுள்ளார் குஷ்பு.
|
வெளிநாடு
நான் என் குழந்தைகளுடன் இன்று வெளிநாட்டிற்கு கிளம்புகிறேன். விடுமுறையில் அவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்களுடன் நேரம் செலவிடப் போகிறேன் என்று குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
கேள்விகள்
நான் பலர் உயர பறந்ததை பார்த்துள்ளேன். உயரத்தில் இருந்து விழுவதில் இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள். குட் லக். உங்களுக்கு பதில் சொல்வதை விட என் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது எனக்கு முக்கியம் என்று குஷ்பு ட்விட்டரில் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications