நாராயணசாமி பதவியேற்பதற்குள் ஒரு ரவுண்டு புரட்சியை முடித்து விடுவார் போல கிரண்பேடி!
புதுச்சேரி: மக்களின் நலன் சார்ந்து புதுப்புது திட்டங்களை கொண்டு வந்து கலக்கி வரும் புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநர் கிரேண் பேடி, தற்போது மேலும் ஒருபடியாக வாட்ஸ்ஆப் குரூப்பில் உயர் அதிகாரிகளுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கிரேண் பேடி, பொறுப்பேற்ற சிறிது நாட்களிலேயே மக்களை கவரும் வகையில் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். மேலும், அரசு எவ்வாறு பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் எடுத்துக்காட்டும் அளவிற்கு அவர் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் மக்களுக்காக 1031 என்ற இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியிருந்தார். இதன் மூலம் மக்கள் தாங்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் எளிதில் புகார் தெரிவிக்க முடியும். ஆக்கிரமிப்புகள் அகற்றம், ஊழல் முறைகேடுகள், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அடுத்த வாரம் முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
இதேபோல, அடிப்படை மற்றும் பொதுப்பிரச்சினைகள், பேரிடர் போன்றவற்றுக்காக 1070 என்ற இலவச தொலைபேசியும் அடுத்த வாரம் செயல்பாட்டுக்கு வருகிறதாம். இந்த எண்ணை அடுத்த வாரத்தில் நிறுவ கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
அரசுத்துறை அலுவலகம் என்றால் எப்போது வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அதை உடைத்தெறியும் வகையில் அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் காலை 9.30 மணிக்கு அலுவலகத்துக்கு வர வேண்டும். மேலும், மாலை 5 மணி முதல் முதல் 6 மணி வரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவிட்டவர் ஒழுங்காக இருக்காரா என கேள்வி மக்களிடையே எழலாம். அதற்கும் தனது செயல்பாட்டின் மூலமாக பதில் அளித்திருக்கிறார் கிரேண்பேடி. ஆளுநர் மாளிகையில் தன்னை சந்திக்க வரும் மக்களிடம் தானே நேரடியாக குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்தும் வருகிறாராம்.
இந்நிலையில், உயரதிகாரிகளை எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக வாட்ஸ்அப் குரூப்பில் கிரேண்பேடி இணைத்துக் கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் தலைமைச் செயலர், துறை செயலர்கள், ஐஜி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகளை அனுகக்கூடிய அந்தந்த துறைகளின் அதிகாரிகள் இதில் இடம் பெற்றுள்ளார்களாம். இதன் மூலம் துணை நிலை ஆளுநராக உள்ள கிரேண்பேடி, தனக்கு தெரியவரும் மக்கள் பிரச்சனைகளை எளிதில் அதிகாரிகள் மத்தியில் கொண்டு செல்ல முடியும்.
நாராயணசாமி முதல்வர் பதவியை ஏற்பதற்குள் ஒரு ரவுண்டு புரட்சியை முடித்து விடுவார் போல கிரண்பேடி!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications