ராட்டினம் உடைந்து ஒருவர் உயிரிழந்த வழக்கில் கிஷ்கிந்தா உரிமையாளர், மேலாளர் கைது
சென்னை: தாம்பரம் அருகேயுள்ள கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக உரிமையாளர் ஜோஸ்புனூஸ், மேலாளர் சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இது நாட்டிலேயே சிறந்த முறையில் செயல்படும் பூங்காவிற்கான விருதினைப் பெற்றுள்ளது. இங்கு கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளை கவர ‘டிஸ்கோ' என்ற புதுவகை ராட்டினம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ராட்டினம் பயன்பாட்டில் இல்லை.

நேற்று மாலை பூங்கா நேரம் முடிந்ததும் ‘டிஸ்கோ' ராட்டினத்தை இயக்கி பார்க்க ஊழியர்கள் முடிவு செய்தனர். சுமார் 25 ஊழியர்கள் ராட்டினத்தில் அமர்ந்து இருந்தனர். ராட்டினம் வேகமாக சுழன்றபோது திடீரென 3 துண்டுகளாக உடைந்து விழுந்ததுக்குள்ளானது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குன்றத்தூரை அடுத்த புதுநல்லூரை சேர்ந்த மணி (வயது 25) என்பவர் பலியானார்.
இந்த விபத்து தொடர்பாக ‘கிஷ்கிந்தா' நிறுவனத்தின் உரிமையாளர் ஜோஸ்புனூஸ் மற்றும் மேலாளர் சக்திவேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அஜாக்கிரதையாக இருந்த குற்றசாட்டின் கீழ் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications