தாலியை அகற்றும் முன்பு கருப்பு சட்டையை அகற்ற தயாரா? வீரமணிக்கு கொங்குநாடு ஈஸ்வரன் கேள்வி
கோவை: தாலி கழற்றும் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ள திராவிடர் கழகத்திற்கு, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொ.ம.தே.க. பொது செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை:
திராவிடர் கழகத்தினர் வரும் 14ம் தேதி தாலி அறுக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருப்பது சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் உள்நோக்க செயலாகும். தமிழர் பண்பாட்டுக்கு எதிரான முறையினை ஏவ முயற்ச்சிக்கிறார்கள்.

தமிழகத்தில் 80 சதவீத திருமண பெண்கள் தாலி அணிந்திருக்கிறார்கள். தாலியை அறுப்போம் என்பது மோசமான விளைவை ஏற்படுத்தும். தாலி என்பது திருமணம் ஆன பெண் என்று மற்றவர்கள் மரியாதையோடு அடையாளப்படுத்தவதற்கு அது உதவும்.
திடாவிடர் கழகத்தினர் கி.வீரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கறுப்பு சட்டை அணிவது ஏன்? உங்களை நீங்கள் திராவிடர்கள் என்று அடையாளப்படுத்தி கொள்ள தானே? அதை கழற்றுங்கள் என்று சொன்னால் உங்கள் உரிமை என்று சொல்ல மாட்டீர்களா?
தமிழர் மொழியை காப்பாற்றுவது உங்கள் கொள்கை என்று சொல்லும் திராவிடர்கள், தமிழர் பண்பாட்டை அழிக்க முயற்சிப்பது ஏன்? தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் காக்கப்பட்டால் தான் தமிழ் மொழி பாதுகாப்பாக இருக்கும்.
மேலும், அருந்ததியர் பிற்பட்ட சமுதாய இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து எதிர்த்து வருகிறார். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் தொகையில் அருந்ததியர் 3-ல் ஒரு பங்கு உள்ளனர். அப்படி பார்த்தால் அவர்களுக்கு 6 சதவீதத்திற்கு மேல் ஒதுக்க வேண்டும். இதை டாக்டர் கிருஷ்ணசாமி புரிந்து கொண்டு அருந்ததி சமுதாயத்திற்கு எதிரான வழக்கை கைவிட வேண்டும். அவர்களின் உரிமைகளை பறிக்க நினைக்கும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தேவை ஏற்பட்டால் அருந்ததி சமுதாயத்திற்காக டாக்டர் கிருஷ்ண சாமியை எதிர்த்து போராட்டமும் நடத்த தயார். இவ்வாறு ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications