கெயில் எரிவாயு குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு- கொ.ம.தே.க. மாநாட்டில் தீர்மானம்
Subscribe to Oneindia Tamil

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர்-ஆதியூர் பிரிவில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவைத் தலைவர் ஆர்.தேவராஜன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் பி.ஆர்.டி.சென்னியப்பன் முன்னிலை வகித்தார்.
இதில் கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இம்மாநாட்டில், நாடு முழுவதும் நதி நீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன், தென்னிந்திய நதிகளை இணைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்களை விவசாய நிலங்களில் பதிப்பதைக் கைவிட்டு, தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்வதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications