For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்: அமெரிக்காவில் படித்த சிட்டிங் எம்.பி.

By Siva
|

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார். அந்த பட்டியலில் அவரது மூத்த மகன் மு.க. அழகிரிக்கு இடம் இல்லை.

இந்நிலையில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. பற்றி தெரிந்து கொள்வோம்.

Know the DMK candidate for South Chennai

அவர் ஏற்கனவே வட சென்னை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். தற்போது இரண்டாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். திமுக அமைப்பு செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் உள்ள அவர் சென்னை லாயிட்ஸ் காலனியில் வசித்து வருகிறார். அண்ணாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்த தத்துவ மேதை டி.கே. சீனிவாசனின் மகன் தான் இந்த இளங்கோவன்.

அவருக்கு நளினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இளங்கோவன் அமெரிக்காவில் முதுகலைப்பட்டம் பெற்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
South Chennai DMK candidate TKS Elangovan MP is contesting in the parliament election for the second time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X