கொடைக்கானல் விபத்து.. மனிதாபிமானம் இல்லாமல் சென்ற பஸ் டிரைவர்.. மக்கள் செய்த மறக்க முடியாத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பாதையில் லாரி மோதியதில் தனியார் பேருந்து அந்தரத்தில் தொங்கியது. அதில் சிக்கியவர்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்த வழியாக வந்த அரசு பேருந்தில் ஏற காத்திருந்தனர். ஆனால் அரசு பஸ் டிரைவர் மனிதாபிமானமே இல்லாமல் வண்டியை நிறுத்தாமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் வெறும் சுற்றுலாத்தலம் மட்டுமல்ல.. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் கூட. அந்த மக்கள் விவசாயத்தையே பிரதானமாக நம்பி உள்ளனர். கொடைக்கானலை சுற்றி சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஏராளமான மலை கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களுக்கு வத்தலக்குண்டில் இருந்து தினமும் ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. குறிப்பான தனியார் பேருந்துகள் அதிகமாக செல்கின்றன. கொடைக்கானலுக்கு வரும் பயணிகள் பெரும்பாலும் வத்தலக்குண்டு பகுதி வழியாக செல்கிறார்கள். இதுதான் மெயின் வழித்தடமாக உள்ளது.

Kodaikanal accident: Do you know what the government bus driver did?

கொடைக்கானலுக்கு மலைப்பாதை சமவெளியில் இருந்து சுமார் 47 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்லும். கொடைக்கானலுக்கு பயணித்தால் முதலில் காணும் சுற்றுலா தளம் என்றால் அது டம் டம் பாறை தான். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்த மஞ்சளாறு அணையின் எழில் மிகு தோற்றமும், அங்கேயே தமிழ்நாட்டின் மிக உயரமான அருவியான தலையாறு அருவியும் (எலிவால் அருவி) பார்க்கும் இடமாக உள்ளது.

இந்நிலையில் வத்தலக்குண்டுவில் இருந்து தனியார் பேருந்து ஒன்று கொடைக்கானல் நோக்கி நேற்று காலை 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை பண்ணைக்காடு அடுத்த தாண்டிக்குடியைச் சேர்ந்த 32 வயதாகும் இளங்கோவன் என்பவர் ஓட்டி சென்றார்..
இந்த பேருந்தில் 54 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். டம் டம் பாறை கீழே பட்டப்பாறை அருகே சாலை வளைவில் டிரைவர் பேருந்தை மேல்நோக்கி திருப்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு வந்த டிப்பர் லாரி, எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதியது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பில் மோதி நின்று அந்தரத்தில் தொங்கியது. அப்போது பேருந்தில் டிரைவர் அருகே முதல் இருக்கையில் அமர்ந்திருந்த தேனி மாவட்டம் பெரியகுளம் இ.புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா நகரை சேர்ந்த 32 வயதாகும் நித்யா (32) என்பவர் திடீரென முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.

இதனால் மற்ற பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதற்கிடையே அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பஸ் அந்தரத்தில் தொங்குவதை கண்டு உடனடியாக வத்தலக்குண்டு தீயணைப்பு படையினர், தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தார்கள்

அவர்கள் பேருந்தில் சிக்கிய டிரைவர், நடத்துனர் மற்றும் பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் டிரைவர் இளங்கோவன், பயணியான மதுரை அழகப்பா நகரை சேர்ந்த ராமர் (72) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து பள்ளத்தில் கயிறு கட்டி இறங்கிய தீயணைப்பு வீரர்கள் நித்யாவை தீவிரமாக தேடினர். சுமார் 2 மணி தேடுதலுக்கு பிறகு அவரை கண்டுபிடித்தனர். நித்யா படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்ததுடன், சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே விபத்தில் சிக்கிய பஸ்சில் வந்த பயணிகள், வேறு பஸ்களில் கொடைக்கானல் செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்ததார்கள். அப்போது அந்த வழியாக கொடைக்கானல் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்தது. பயணிகள் அந்த பஸ்சை மறித்துள்ளனர, ஆனால் அந்த அரசு பஸ் டிரைவர் பேருந்தை நிற்காமல் சென்றுவிட்டார். இதனால் பயணிகள் ஆத்திரமடைந்தனர்.

பின்னர் வேறு பஸ்சில் ஏறி அவர்கள் கொடைக்கானலுக்கு சென்றார்கள். அப்போது அங்கு பயணிகளை ஏற்றாமல் வந்த அரசு பஸ் நின்று கொண்டிருந்ததை பார்த்த மக்கள், பஸ்சை முற்றுகையிட்டு, நிற்காமல் சென்றதை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டது ஏன் என டிரைவர், கண்டக்டரிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பயணிகள் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து கொடைக்கானல் அரசு போக்குவரத்துக்கழக அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து, பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து கலைந்து போக செய்தார். இதனால் நேற்று கொடைக்கானலில் பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+