கொடநாடு கொலை வழக்கு: கோவை மருத்துவமனையில் சயான் தற்கொலை முயற்சி.. பெரும் பரபரப்பு!
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான சயான் கோவை அரசு மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான சயானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது. இங்குள்ள பங்களாவில் ஜெயலலிதா வந்து தங்கி ஓய்வெடுத்து செல்வார்.

கொடநாடு எஸ்டேட்டில், கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி நள்ளிரவு காவலாளி ஓம் பகதூர் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவரது நண்பர் சயான், ஏப்ரல் 30ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு அருகே நிகழ்ந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
சயான் மேல் சிகிச்சைக்காக கடந்த மே மாதம் 13ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, நீலகிரி மாவட்ட போலீசார் இரு தினங்களுக்கு சயானை கைது செய்தனர்.
கொடநாடு எஸ்டேட்டில் கொலை சம்பவம் குறித்து சயான் செயல் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இதன்பின், கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சயானை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சயானுக்கு கையில் கடுமையான வலி ஏற்பட்டதால், அவர் 6ஆம் தேதி நள்ளிரவில் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சயான் இன்று தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications