கொடநாடு காவலாளி கொலை விசாரணை சரியாகதான் போகுது.. எதுக்கு சிபிசிஐடி விசாரணை.. டிஜிபி கேள்வி
கொடநாடு காவலாளி கொலை வழக்கு விசாரணை சரியானப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார். அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டுக்குள் கடந்த 24ம் தேதி அதிகாலை புகுந்த கும்பல் ஒன்று காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. இதில் மற்றொரு காவலாளி கிஷன்பகதூர் படுகாயம் அடைந்தார்.
இந்த வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்த பின்னர், கொள்ளை கும்பல் ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் மற்றும் கண்ணாடி அலங்கார பொருட்களை மட்டும் கொள்ளையடித்து சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

மர்மம்
அதே போன்று கேரளத்தைச் சேர்ந்த சயான் என்பவரும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ளார். இந்த அடுத்தடுத்த சாலை விபத்து சம்பவங்கள் இந்தக் கொலையில் உள்ள மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது.

விசாரணை
காவலாளி கொலை வழக்கையும், இந்த விபத்து வழக்குகளையும் நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும் என்றும், கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போனது என்ன என்பது பற்றியும் வெளிப்படையாக விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை
மேலும், ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும் என தி.மு.க. செயல்தலைவரும், எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சி.பி.ஐ விசாரணை தேவை என்று கூறி வருகிறார்.

மறுப்பு
இந்த நிலையில், இன்று சென்னையில் கால்பந்துப் போட்டி தொடக்க விழாவிற்கு சென்ற டிஜிபி ராஜேந்திரன் செய்தியாளர்களிடம், கொடநாடு காவலாளி கொலை வழக்கின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால், அதனை சிபிசிஐடிக்கு மாற்றும் திட்டமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications