பயனற்று கிடக்கும் கோடநாடு “பைனாகுலர்”... பயன்தருமா சுற்றுலாபயணிகளுக்கு?
கோத்தகிரி: கோத்தகிரி கோடநாடு காட்சிமுனையில் உள்ள "பைனாகுலர்" பயனற்று மூடி வைக்கப்பட்டுள்ளதால் இயற்கை காட்சிகளை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
கோத்தகிரியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோடநாடு காட்சிமுனை. உலக சுற்றுலா வரைப்படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ள இக்காட்சி முனை போதிய விளம்பரம் இல்லாமல் உள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இக்காட்சிமுனையில் இருந்து பார்த்தால் நீலகிரி மாவட்டத்துக்கு சொந்தமான சமவெளி பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹாடா கிராமத்தை கண்டுகளிக்க முடியும்.கர்நாடக மாநிலத்தை ஒட்டி வரலாற்று சிறப்புமிக்க அல்லிராணி கோட்டை மாயார் ஆற்று உள்ளிட்ட மலை மாவட்டத்தில் உற்பத்தியாகி வளைந்து நெளிந்து சங்கமமாகும் பவானிசாகர் அணையின் முழுத்தோற்றம் கண்களுக்கு விருந்தாக அமையும்.
இதைதவிர ரங்கசாமி பில்லர் மலைமுகடுகளுக்கு இடையே வெள்ளியை உருக்கியது போல் ரம்மியமாக கொட்டும் சிற்றோடைகள் பசுமையான சோலைகள் தேயிலை தோட்டங்கள் என இயற்கை அழகுக்கு பஞ்சமில்லை.
இத்தகைய இயற்கை அழகு காட்சிகளை கண்களுக்கு மிக அருகே கொண்டுவந்து காட்டும் "அதிநவீன பைனாகுலர்' அமைக்கப்பட்டு அதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் பயனடைந்து வந்தனர்.தற்போது பைனாகுலர் பழுடைந்த நிலையில் கண்ணாடி அறைக்குள் மூடி வைக்கப்பட்டு காட்சி பொருளாகவே மாறியுள்ளது. இது சுற்றுப்பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.இதன் காரணமாகவே ஆண்டுதோறும் நடைபெறும் கோடை சீசன் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.தவிர "கோடநாடு காட்சிமுனை குறித்து போதிய விளம்பரங்கள் இல்லாததே சுற்றுலாப் பயணிகள் குறைய காரணம்" எனவும் கூறப்படுகிறது.
எனவே அதிமுக்கியமான சுற்றுலா மையமான கோடநாடு காட்சிமுனையை சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் புனரமைத்து இயற்கையை கண்டுக்களிக்க புதிய பைனாகுலர் பொருத்தி சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையிலான மாற்றங்களை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications