கூடங்குளத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி!
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆய்வு பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதல் அணு உலையில் கடந்த 22 ஆம் தேதி மின்சார உற்பத்தி தொடங்கியது.

முதற்கட்டமாக 70 முதல் 160 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்புக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, சில ஆய்வுகளுக்கு, ஆயத்தப் பணிகளுக்காகவும் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேலும், ஆய்வு பணிகள் முடிவடைந்த நிலையில், முதற்கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்ததால், கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க அணுசக்தி கழக ஒழுங்காற்று வாரியம் அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து, நேற்று இரவு 9.43 மணிக்கு கூடங்குளம் முதல் உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது.
தற்போது 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, இனி படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும். இனி தொடர்ச்சியாக மத்திய மின் தொகுப்புக்கு மின்சாரம் அனுப்பப்படும் என்று கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications