கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி 1000 மெகா வாட்டாக உயர்வு
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலையில் மின் உற்பத்தி ஆயிரம் மெகா வாட்டை எட்டியது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் அணு உலையில் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி மின் உற்பத்தி துவங்கப்பட்டது. பின்னர், படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

2014ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை எட்டியது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி ஆய்வு பணிக்காக முதல் அணு உலை நிறுத்தப்பட்டது. அப்போது வரை 9267 மணி நேரங்கள் அணு உலை இயங்கியிருந்தது. முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜனவரி 17ம் தேதி உயர் வெப்ப அழுத்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் கூடங்குளத்தில் மீண்டும் முதல் அணு உலையில் மின்சாரம் தயாரிக்க அணுசக்தி ஓழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது.
பிப்ரவரி 1ம் தேதி காலை நிலவரப்படி 350 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்ட்டது. இந்த உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இரவு 9 மணிக்கு முதல் அணு உலையில் மின் உற்பத்தி 1000 மெகா வாட்டை எட்டியது என அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அடுத்தடுத்த மாதங்களில் அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications