யானைகள் நலவாழ்வு முகாம்.. கோவையில் ஜனவரி 4ம் தேதி துவக்கம்!
கோவை அருகே இருக்கும் தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் வருகிற 4ம் தேதி துவங்கிறது.
கோவை : கோவை அருகே இருக்கும் தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் வருகிற 4ம் தேதி துவங்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழக அரசு சார்பில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான புத்துணர்வு முகாம் கோவையில் வருகிற 4ம் தேதி துவங்குகிறது.

தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோவில் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் இந்த புத்துணர்வு முகாம் நடத்தப்பட இருக்கிறது. பிப்ரவரி 20ம் தேதி வரை மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த புத்துணர்வு முகாமில் மொத்தம் 34 யானைகள் பங்கேற்கின்றன.
முகாமில் தங்க வைக்கப்படும் யானைகளுக்கு கால்நடை அலுவலர்கள், டாக்டர்கள் நேரடி பார்வையில் சிகிச்சைகள், உடல் எடை பராமரிப்பு, மருத்துவ மூலிகை உணவு வழங்கல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.
இந்த முகாமில் பங்கேற்க நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் இருந்து யானைகள் 2ம் தேதி மாலை முதல் அழைத்து செல்லப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, சங்கரன்கோவில் சங்கர நராயாண சாமி கோவில் யானை கோமதி, இலஞ்சி வள்ளி, திருங்குடி ஜீயர் மடத்தில் உள்ள வள்ளி, சுந்தரவள்ளி யானை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரி ஆதி நாதர் கோயில் யானை ஆதிவள்ளி, இரட்டை திருப்பதி லட்சுமி, குமுதவல்லி, திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை ஆகியவை பங்கேற்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications