2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு... தேடப்பட்ட புரோட்டா மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை
கோவை: கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீசாரால் தேடப்பட்டு வந்த பரோட்டா மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை, இடையர்பாளையம் காந்திநகரில் பரோட்டா கடை நடத்தி வருபவர் முத்துபழனி (53). கடந்த ஞாயிறு அன்று, பழனி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 மற்றும் 12 வயதுள்ள இரண்டு சிறுமிகளுக்கு சாக்லேட் வாங்கிகொடுத்து, பாலியல் தொந்தரவு தந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர், துடியலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அப்புகாரின் பேரில் பழனி மீது வழக்கு பத்தி செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தன் மீது போலீசில் புகார் அளித்திருப்பது தொடர்பாக அறிந்த பழனி தலைமறைவானார்.
இந்நிலையில், தலை மறைவான முத்துபழனி, தனது சொந்த ஊரான மதுரை மாவட்டம், மேலுார், கொட்டப்பட்டியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கோவை போலீசார் விசாரணைக்காக அங்கு சென்றனர்.
போலீசாருக்கு தனது இருப்பிடம் தெரிந்து விட்டது என்பதை அறிந்த பழனி, அதே ஊரில் ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications