கி.வீரமணி 85-வது பிறந்த நாள்: கோவை. ராமகிருட்டிணன் நேரில் வாழ்த்து
தி.க. தலைவர் வீரமணிக்கு தந்தை பெரியார் தி.க. தலைவர் கோவை ராமகிருட்டிணன் நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 85-வது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் தி.க. தலைவர் கோவை ராமகிருட்டிணன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தி.க.(கோவை ராமகிருஷ்ணன்) பிரிவாக செயல்பட்டு வந்தார் ராமகிருட்டிணன். தற்போது தந்தை பெரியார் தி.க. தலைவராக இருந்து வருகிறார் ராமகிருட்டிணன்.

இந்த நிலையில் ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் கி. வீரமணியின் 85-வது பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வுக்கு கோவை ராமகிருட்டிணன் நேரில் வந்து வீரமணியை வாழ்த்தினார்.
இது திராவிடர் இயக்க தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதேபோல் பிரிந்து இருக்கும் திராவிடர் இயக்கத் தலைவர்கள் ஓரணியில் சேர வேண்டும் என்றும் அந்த இயக்க தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications