வைகோ, நெடுமா கெளம்பிட்டாங்க டீமா.. போயஸு காலை தொட்டு... வைரலாகும் கோவனின் அதிரடி பாட்டு
சென்னை: தனித் தமிழீழம் அமைய தாம் உதவுவேன் என திருச்சியில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் ஈழ நிலைப்பாடு, அவருக்கான வைகோ, நெடுமாறன், சீமானின் ஆதரவு ஆகியவற்றை விமர்சிக்கும் பாடகர் கோவனின் பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மூடு டாஸ்மாக்கை மூடு.. பாடலைப் பாடியதால் தேச துரோக சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் கோவன். அவருக்காக ஒட்டுமொத்த நாடே ஆதரவு குரல் கொடுத்தது. அவர் மீதான தேசதுரோக வழக்கை நீதிமன்றமே ரத்து செய்தது.
இதனிடையே திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா, இலங்கையில் தனித் தமிழீழம் அமைய உதவுவேன்; தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தமது அரசின் நிலைப்பாடு என உறுதியளித்திருந்தார். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை உடனே தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வரவேற்று அறிக்கை கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பாடகர் கோவனின் பாடல் ஒன்று நேற்று முதல் வைரலாக பரவி வருகிறது. அந்த பாடல் ஜெயலலிதாவின் திருச்சி உரை, நெடுமாறனின் வரவேற்பைத் தொடர்ந்து வெளியிடப்பட்டதா? அல்லது முன்னர் எப்போதோ பாடப்பட்டதா? என்பது அதில் தெளிவாக இல்லை.
ஆனால் ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு நிலைப்பாடு, வைகோ, நெடுமாறன், சீமான் ஆகியோரின் ஜெயலலிதாவின் ஈழ ஆதரவுக்கு பாராட்டு ஆகியவற்றை விமர்சிக்கிறது அந்த பாடல்.
பாடல் விவரம்:
வைகோ...நெடுமா......சீமா......கெளம்பிட்டாங்க டீமா
போயஸு காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கிகிட்டு
ஈழம் தனி ஈழம்னு கூவலாமா? தமிழனை இளிச்சவாயனாக்கலாமா? என்று ஆரம்பித்து
தின்ன களிவாசம் மறந்து போச்சா.....? உன்னை நம்பி வரும் தமிழனுக்கு சொல்லு ராசா....
கொல்ல வாரான் புலியின்னு கிளப்பிவிட்டு
நரிக்குறவரையும் புலியின்னு பிடிச்சுபோட்டு
புலியோட தலைவரையே போடவேணும் தூக்குலன்னு
தூக்கத்துலயும் எந்திரிச்சு கத்துனாரே...
நீங்க தூக்கிவெச்சு ஆடுறது எதனாலே?
ஆதரவு தேடிவந்த அகதிகளைத்தான்
அடைச்சு வெச்சார் முள்ளுகம்பி வேலியில
ஆறுமணி ஆனாலே அடைய வேணும் கேம்புக்குள்ளே
போலீசு தொந்தரவு கொஞ்சம் இல்ல அட
இத்தனையும் ஈழத்தாய் செஞ்ச வேல...
ஈழ ஆதரவு வேஷம் போட்டு எதிர்ப்புன்னு கோஷம் போட்டு
ஆட்டய போடுது கன்னிங் லேடி
இதுக்கு ரூட்டு போட்டு தாராராம் நாலு தேங்கா மூடி என்று போகிறது இந்தப் பாடல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications