கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நம்ம ஊர் ஸ்வீட்ஸ்&ஸ்நாக்ஸ் உடன்... ஆன்லைனில்...

Subscribe to Oneindia Tamil

கிறிஸ்துமஸ் முன்னிட்டு நேடிவ்கிருஷ்.காம் இல் சிறப்பு தள்ளுபடியில் நமது பாரம்பரிய பலகாரங்கள் சிறந்த முறையில் வழங்கப்படுகிறது.

நமது தமிழக பாரம்பரியத்தில் உணவுக்கென்று தனி இடம் உண்டு. நமது முன்னோர்களின் தாரக மந்திரமே "உணவே மருந்து மருந்தே உணவு" உணவானது நமது உடல்நலத்தை பேணி வளர்ப்பதாக இருக்க வேண்டும். அது பெருவுணவாயினும் சிறுவுணவாயினுமே.

Kovilpatti Kadalai Mittai | Buy best ground chikki online!

நம் வாழ்வில் நொறுக்கு தீனிக்கான தனி இடமே மன நிறைவு. சிறு உணவின் மூலமாக உடலுக்கு தேவையான சத்துக்கள் உடனடி ஈடு செய்யபடுகிறது. மண் சார்ந்த உணவு முறை வழியே நொறுக்குதீனி நம் வாழ்வில் முக்கியத்துவமாகிறது. இதற்கு உதாரணமாக கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் சேவு, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா.

இதில் கோவில்பட்டி கடலை மிட்டாயில் 75% கடலை பருப்பும் 24% வெல்லமும் 1% சுக்கும் சேர்க்கப்படுகிறது. கடலை உடலுக்கு அதிக அளவு புரதத்தையும் வெல்லம் பித்தம் நீக்கியாகவும் சுக்கு செரிமான தூண்டியாகவும் செயல்பட்டு உடல் வன்மையை அதிகப்படுத்துகிறது .

திருநெல்வேலி அல்வாவில் குடல் புண்ணை ஆற்றும் சக்தியும் வயிற்றுபோக்கை கட்டுபடுத்தும் சக்தியும் அதன் சுவை மன ஊக்கியாகவும் செயல்படுகிறது.

Kovilpatti Kadalai Mittai | Buy best ground chikki online!

​ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, நம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை அதிகபடுத்தி நம் உடலுக்கு வன்மையையும் சக்தியும் கொடுக்கிறது. முக்கியமாக குழந்தைகளுக்கு சிறந்த உடல் தேற்றியாகவும் பெரியோர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

சிறிய உணவு பெரிய பலன், இதுவே நம் தாரக மந்திரமும் தனிசிறப்புமாக கொண்டு சிறிய உணவில் குறைந்த செலவில் நிறைந்த பலனை அடையலாம்.

நொறுக்குதீனியில் உடல் நலமும் மன நிறைவும் மிக அதிகம். நம் உடல் தேவைக்கேற்ப்ப சக்தியை தேவையான அளவில் சரியான நேரத்தில் நாம் பெறுவதற்கு நொறுக்கு தீனிகளே சிறந்த வழி.

திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

நெய் - 300 கிராம்,

கோதுமை - 200 கிராம்,

சீனி - 600 கிராம்

நெய் - தேவையான அளவு

நெய்யில் வருத்த முந்திரி - தேவையான அளவு

ருசியான இருட்டு கடை அல்வா செய்முறை:

இருட்டுக்கடை அல்வாவின் ருசி அவர்கள் அனைத்தும் கையிலே செய்வது தான், அந்த ருசி வேண்டும் என்றால் நீங்களும் இது போல் செய்யுங்கள்.

Kovilpatti Kadalai Mittai | Buy best ground chikki online!

கோதுமையை முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைக்க வேண்டும் குறைந்தது 8 மணி நேரம் அல்லது ஓர் இரவு. கோதுமை ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க வேண்டும். கோதுமையை அரைக்க அரைக்க பாலாக பொங்கும். அதை ஒரு வெண்மையான துணியை வைத்து வடிகட்டி பாலை தனியாக எடுக்க வேண்டும். இது போல் அதிக பட்சம் மூன்று முறை பால் எடுக்கலாம். இந்த பாலை அப்படியே வைத்து விட்டால் கெட்டியான பால் அடியில் தங்கி நீர் மேலே வந்துவிடும் அந்த நீரை நீக்கி விடுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை (பாத்திரம்) வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும். பால் கொதித்து வரும்போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை சிறிது நேரம் கூட நிறுத்தக் கூடாது. பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை சேர்த்து ஊற்றிக் கிளற வேண்டும். கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும். அப்படி வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் இருட்டுக்கடை அல்வாவின் ருசி அப்படியே இருக்கும்.

இந்த இருட்டுக்கடை திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் எதிர் புறம் உள்ளது. திருநெல்வேலிக்கு வரும் பலருக்கு இந்த கடை அல்வா கிடைப்பது இல்லை. இதனால் இதற்க்கு அடுத்த இடத்தில் உள்ள சாந்தி ஸ்வீட் அல்வா இங்கு மிக பிரபலம். ஆனால் சுத்தமான சம்பாக் கோதுமையில் நெய், சர்க்கரை, பால் மட்டும் சேர்த்துச் செய்யப்படும் அல்வா மிகச் சுவையாக நெல்லையின் பல இடங்களில் கிடைக்கிறது. அதிலும் உங்கள் நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) உங்கள் இல்லத்திற்கே கொண்டு வந்து சேர்க்கிறது.

தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனை அடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல் நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறு ஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள்

இல்லம் தேடி வருகிறது. நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம் (www.nativcrush.com).

ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு அவற்றை ஒரே இணையதளத்தில் மிக குறைவான விலையில் விற்கிறது நமது நேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்கு பிடித்த மற்றும் ஆசை பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+