ஜெயலலிதாவால் பிரதமர் ஆக முடியுமா?.. இல்லை!
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் எந்த கட்சி வெற்றி பெறும், யார் பிரதமர் ஆவார் என்பது குறித்து தந்தி தொலைக்காட்சி நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகளை பார்ப்போம்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு வேலைகளில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் எந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பது பற்றி ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன.
தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. கன்னியாகுமரி, நாகப்பட்டிணம், அரக்கோணம், வேலூர் தொகுதி கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இன்றைக்கு கிருஷ்ணகிரி தொகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் விபரங்களைப் பார்ப்போம்.
(தந்தி டிவி ஒவ்வொரு தொகுதியிலும் கருத்துக்கணிப்பை முடித்தவுடன் அதன் விவரங்களை நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து அளிப்போம்.)
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,
ஆம் 9% இல்லை 91%

மீண்டும் வாக்களிப்பீர்களா?
தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வர வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,
ஆம் 12% இல்லை 88%

யாருக்கு உங்கள் வாக்கு?
மாநில கட்சியா தேசிய கட்சியா யாருக்கு உங்கள் வாக்கு?
மாநில கட்சி 70 % தேசிய கட்சி 30%

தேசிய கட்சியில் யாருக்கு வாக்கு?
தேசிய கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு மக்கள் தந்த பதில்,
பாஜக - 58%, காங்கிரஸ் - 42%

மாநிலக் கட்சி
மாநிலக் கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் உங்கள் வாக்கு எந்த கட்சிக்கு?
அதிமுக - 60%, திமுக - 23 %, தேமுதிக -5 %, மதிமுக - 4%, பாமக- 8%

அடுத்த பிரதமர் யார்
இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் அளித்த பதில்
நரேந்திர மோடி - 65%
ராகுல்காந்தி - 12%
ஜெயலலிதா - 23%

இந்தியாவின் மீட்பர் யார்?
நரேந்திர மோடி - 72%
ராகுல்காந்தி 12%
ஜெயலலிதா 16%

ஆம் ஆத்மி கட்சி
ஆம் ஆத்மி கட்சியைத் தெரியுமா?
ஆம் ஆத்மி கட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்விக்கு மக்கள் பதில்,
தெரியும்- 57 %, தெரியாது - 43%

ஜெயலலிதா அடுத்த பிரதமராக ஆதரவு
ஜெயலலிதாவால் அடுத்த பிரதமர் ஆக முடியுமா? என்ற கேள்விக்கு மக்கள் தந்துள்ள பதில்,
ஆமாம்- 18%, இல்லை - 55%, வாய்ப்பு இருக்கலாம் - 27%
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications