தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் வைத்திருந்த கிருஷ்ணகிரி இளைஞர் கைது!
கிருஷ்ணகிரி: தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் ஒன்றை வைத்திருந்த கிருஷ்ணகிரி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி நாட்டான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்துக்கு பணிசெய்யும் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் வேலை பார்த்து வருகின்றார்.
இந்நிலையில் மதியழகன் வேலை பார்த்த இடத்தில் பழுதான நிலையில் சாட்டிலைட் போன் ஒன்று அவர் கையில் சிக்கியுள்ளது. அது சாட்டிலைட் போன் என்பது தெரியாமலேயே பையில் வைத்திருந்துள்ளார் மதியழகன்.
இந்நிலையில் தனது திருமணத்திற்காக இந்தியா வந்த மதியழகன் அப்போனையும் கையில் கொண்டு வந்துள்ளார். விமான நிலைய சோதனையில் அதிகாரிகள் கண்ணில் அந்த போன் பட்டுவிட்டது.
ஆனால், அதிகாரிகளுக்கும் அது சாட்டிலைட் போன் என்பது தெரியவில்லை. எனவே, அதை சாதாரணமான ஒரு போன்தான் என்று வீட்டில் வைத்திருந்தார். அந்த போனும் அணைக்கப்பட்ட நிலையில்தான் இருந்துள்ளது.
இந்நிலையில் சென்னை க்யூ பிரிவு போலீசாருக்கு அந்த சாட்டிலைட் போனின் சிக்னல் கிடைத்துள்ளது. அது கிருஷ்ணகிரியில் இருந்து வருவது ஜிபிஆர்எஸ் கருவி மூலம் கண்டறியப்பட்டு கிருஷ்ணகிரி காவல்துறையினருக்கு செய்தி அனுப்பப்பட்டது.
இதனையடுத்து கிருஷ்ணகிரி போலீசார் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கவனித்து விசாரணை மேற்கொண்டதில் மதியழகனிடம் அந்த போன் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் அந்த போனை மதியழகன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் காவல்துறையினர் மதியழகனை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications