கன்னத்தில் அறைய முயற்சிக்கட்டும்... சசிகலா கணவர் நடராஜனுக்கு இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா சவால்!
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விவகாரத்தில் சசிகலா கணவர் நடராஜனுடன் மல்லுக்கட்டுகிறார் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா.
Recommended Video

சென்னை: தம்மை கன்னத்தில் அறைவேன் என கூறிய சசிகலா கணவர் நடராஜனுக்கு இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா சவால் விடுத்துள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் ரிலீஸ் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் தினகரன், வெற்றிவேல் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார் கிருஷ்ணப்பிரியா.

கிருஷ்ணப்பிரியா மீது காட்டம்
இதனிடையே உடல்நலம் தேறிய சசிகலாவின் கணவர் நடராஜன் அண்மையில் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் ஜெயலலிதா வீடியோ விவகாரம் குறித்து பேசும்போது, கிருஷ்ணப்பிரியாவின் கன்னத்தில் அறைவேன் என நடராஜன் கூறியிருந்தார்.

நடராஜனை எதனால் அடிப்பது?
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, ஜெயலலிதாவை தொடர்ந்து கொச்சைப்படுத்தும் வகையில் நடராஜன் பேசுகிறார். கிருஷ்ணப்பிரியாவை கன்னத்தில் அறைவேன் என நடராஜன் கூறுகிறார்.. அப்படியானால் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் நடராஜனை எதனால் அடிப்பது? என கேல்வி எழுப்பியிருந்தார்.

முயற்சித்து பார்க்கட்டும்
இந்நிலையில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று கிருஷ்ணப்பிரியா நடராஜனுக்கு சவால்விட்டு பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில், சிறு பிள்ளைகளுக்கு கூட மரியாதை அளிக்கப்படவேண்டும் என்ற கருத்துடையவள் நான். 37 வது வயதிலும், திருமணம் முடித்து 18 ஆண்டுகளும், வயது வந்த குழந்தைகளுக்கு தாயுமாகவும் இருக்கும் ஒரு பெண்னை, பெண் என்றும் பாராமல், ஊடகத்தில் , " கன்னதில் அறைவேன் " என்று கூறுகிறார் பெரியவர் ,என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர். முயல முற்படட்டும் முதலில்.. என பதிவிட்டுள்ளார் கிருஷ்ணப்பிரியா.

ஆதரவாளர்கள் கருத்து
அதேபோல் மற்றொரு பதிவில், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனவும் நடராஜனுக்கு எதிராக கொந்தளித்திருக்கிறார் கிருஷ்ணப்பிரியா. அவரது ஆதரவாளர்கள் இந்த இரு பதிவுகளிலும் வரிந்து கட்டிக் கொண்டு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications