வாசனைச் சந்தித்தார் கிருஷ்ணசாமி... அரசியல் நோக்கம் இல்லை என்கிறார்!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்தார்.
விஜயகாந்த் பாணியி்ல் அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச ஆரம்பித்துள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. நேற்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். இன்று ஜி.கே. வாசனை அவர் சந்தித்துப் பேசினார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை, டாக்டர் கிருஷ்ணசாமி இன்று காலை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது.
சந்திப்புக்குப் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஜி.கே.வாசன் கூறியதாவது:-
தமிழகத்தின் ஒட்டு மொத்த நலன் காக்க தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து கிருஷ்ணசாமி பேசி வருகிறார். இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் இல்லை. தமிழக மக்களின் பிரச்சனையில் அனைத்து தலைவர்களும் ஒருமித்த கருத்தோடு தமிழகத்துக்கு நியாயமான தீர்வு பெற ஒன்று சேர உள்ளோம். கிருஷ்ணசாமியின் இந்த நல்ல முயற்சி வரவேற்கத்தக்கது.
சமீப காலமாக தமிழக மக்களுக்கு அண்டை மாநிலம் மற்றும் அருகில் உள்ள நாடால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்' என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி, ‘தி.மு.க. தலைவரை நேற்று சந்தித்தேன். அதே போல் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை இன்று சந்தித்து உள்ளேன். இந்த சந்திப்பு அரசியல் நோக்கத்திற்கான சந்திப்பு அல்ல.
தேசிய அக்கறை மற்றும் தமிழகத்தின் நலனுக்காக நடந்த சந்திப்பு. தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். தமிழகத்தின் குரல் ஒருங்கிணைந்து ஒலிக்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications