ஒட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு வெற்றி வாய்ப்பு - தந்தி டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெல்லும் வாய்ப்புள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், திருவில்லிபுத்தூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சி தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணி சார்பில் தற்போது களமிறங்கியுள்ள டாக்டர் க.கிருஷ்ணசாமி, ஏற்கெனவே இத்தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ளார்
இந்நிலையில் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு 43 - 49 சதவீத ஆதரவு காணப்படுகிறது. அதிமுகவுக்கு 38 - 44 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. தேமுதிக 7 -13 சதவீத ஆதரவு பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒட்டப்பிடாரம் தொகுதி நிலவரம்:
புதக 43 - 49%
அதிமுக 38 - 44%
தேமுதிக 7 -13 %
பிற கட்சிகள் 1 %
நோட்டா 2 %
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications